Breaking
Tue. May 7th, 2024
– ஏறாவூர் அபூ பயாஸ் – 
அன்பின் சகோதரர்களே,
ஏறாவூர்,மிச் நகரை சேர்ந்த காது கேட்காத,வாய் பேச முடியாதிருந்த நான்கு வயது சகோதரன் ரிப்தி ,உங்கள் மேலான உதவிகளைக்கொண்டு செய்யப்பட்ட 16-11-2013 அன்று செய்த சத்திர சிகிச்சை மூலம் “இன்று ஒரு குழந்தை எவ்வாறு தன் பேசும் திறனை வெளிப்படுத்துமோ அவ்வாறு இன்று பேச ஆரம்பித்திருக்கிறான்”.
அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரன் ரிப்தியை பேச வைப்பதற்காக நீங்கள் எல்லாம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
இதனால் கிடைக்கின்ற அத்தனை நன்மைகளுக்கும் நீங்கள்தான் சொந்தக்காரர்கள்.
சகோதரன் ரிப்தியின் விடயத்தில் வெற்றி கண்டதால் ,சென்ற வருடம் 2014 ,ஜூலை மாதமளவில் ஏறாவூர்,பள்ளியடி வீதியை சேர்ந்த ஏறாவூர் பிரதேச செயலக பிரிவில் சமூர்த்தி முகாமையாளராக கடமையாற்றும் திருமதி அலி முஹம்மது நிஹாரா என்னோடு தொடர்புகொண்டு தன்னுடைய இரு பிள்ளைகளுக்கும் ரிப்தியை போல் பேச,கேட்க முடியாமல் இருந்ததால் வைத்தியர்களிடம் பரிசோதித்து பார்த்த போது,ஆண் பிள்ளைக்கு சத்திர சிகிச்சை தேவையில்லை ,காதில் அணியும் மெஷின் போட்டால் போதும் என்றார்கள்.அவ்வாறே அம் மெசின்கள் இரண்டு வாங்கி போட்டதும் அல்ஹம்துலில்லாஹ் எனது மகன் கேட்கும்,பேசும் திறனை பெற்றுள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால், எனது பதினொரு மாத பெண் குழந்தையான(தற்போது பத்தொன்பது மாதங்கள் ) “பாத்திமா நிமா” வுக்கு இரண்டு வயதுக்கிடையில் சத்திர சிகிச்சை மேற்கொண்டால் மாத்திரமே வேறு பயிற்சிகள் இன்றி வழமையான குழந்தைகள் கதைக்கும் வயதில் கேட்கவும்,பேசவும் முடியும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்,
இதற்க்கான செலவாக முப்பத்தாறு லெட்சம் ரூபா செலவாகும் என்றும் மதிப்பறிக்கையும் தந்துள்ளார்கள்.
இச் செலவை ஈடு கொடுக்க என்னால் முடியாமல் இருப்பதால் ,சகோதரன் ரிப்திக்கு எடுத்துக்கொண்ட முயற்சியைப் போல் எனது பாத்திமா நிமா என்ற பதினொரு மாதக் குழந்தைக்கும் செய்து தாருங்கள் என்று அழுது மன்றாடினார்.
எனது கணவரும் (அஹ்மத் முஹமது ஹனிபா) தொழில் வறுமை காரணமாக கட்டார் சென்றும் அங்கும் சீரான தொழில் இன்றி இருக்கிறார். எனது ஆண் மகனுக்கு வருடா வருடம் இரு மெசின்களை மாற்றுவதற்கே ஒன்றரை லெட்சம் செலவாகிறது,தயவு செய்து இப்பெண் குழந்தை விடயத்தில் கூடிய அக்கறை எடுத்து உதவுங்கள் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொண்டார்..
ஏறாவூர் ,பள்ளியடி வீதியை சேர்ந்த சமூர்த்தி முகாமையாளரான திருமதி அலி முஹம்மது நிஹாரா என்பவரின் காது கேளாத ,வாய் பேசாத பதினொரு மாத பெண் குழந்தைக்கான வைத்திய செலவுக்கு தன்னிடம் உள்ள பொருட்களை விற்று ஐந்து லெட்சம் ரூபாவினை (500000/=) தர முடியும் என்றும்,முதற்கட்டமாக அன்றையதினம் இருப்பத்தையாயிரம் ( 25000/=) ரூபாவினையும் நிஹாரா தந்ததால் ஏறாவூர் ,அமானா வங்கியில் நானும்,நிஹாராவுமாக கூட்டுக் கணக்கொன்றை ஆரம்பித்தோம்.
மீண்டும்,மீண்டும் இவ்வாறான செலவு சம்பந்தமான நிகழ்வுகளை தந்து கொண்டிருக்கிறேன் என்று தயவு செய்து அளுத்துக் கொள்ளாதீர்கள்.!இன்ஷாஅல்லாஹ்!
அல்லாஹ் நாடினால் மாத்திரம்தான் எதுவும் நடக்கும்.
இவ்விடயம் சம்பந்தமாக 2014 ஜூலை யில் எனது முகப்புத்தகதிலும்,ஏனைய இணைய ஊடகங்களிலும் வெளிப்படுத்தியதன் மூலமாக இன்றுவரை 978335.09 ரூபா உதவும் உள்ளங்களால் கிடைக்கப்பெற்றுள்ளோம்.
அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் குழநதையின் தாய் மூலம் பெறப்பட்ட ஆறு லெட்சம் ரூபாவினை குழந்தையின் சத்திரசிகிச்சையின்போது தலையினுள் வைக்கும் மெசினறி கொள்வனவுக்காக கொழும்பு மெட் கோன் நிறுவனத்துக்கு செலுத்தியுள்ளோம்.இதன்மூலமும் அந் நிறுவனத்துக்கு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனம் மூலம் பாத்திமா நிமாவுக்கு இரண்டரை லெட்சம் ரூபா கிடைத்துள்ளது.
தற்போது மெட் கோன் கம்பனியில் இருக்கும் எட்டரை லெட்சமும், அமானா வங்கியிருப்பு 978335.09 ரூபாவும் சேர்த்து 1828335.09 ரூபா இன்றுவரை கிடைத்துள்ளது,
   இன்னும் அவ்வாறான ஒரு தொகையே (பதினெட்டு லெட்சம் ) குழந்தையின் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள தேவையாக உள்ளது.
ஒன்பது மாத அயராத முற்சியினால் அல்லாஹ் உதவியால் பதினெட்டு லெட்சம் பெற்ற நமக்கு ,மிகுதிப் பணத்தையும் பெற்றுக்கொள்ள அல்லாஹ் உதவுவான் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் மீண்டும் உதவிகேட்டு வந்துள்ளோம்.
எம்,எஸ்,எம்,நஸீர் (பிரதேச மரண விசாரணை அதிகாரி) ஆகிய இவர்களுக்கு உதவும் நோக்கில் , இக்குழந்தையின் சத்திரசிகிச்சைக்கு பணம் சேகரிப்பதற்காக குழந்தையின் தாயின் பெயரிலும்,எனது பெயரிலும் கூட்டுக் கணக்கை ஆரம்பித்துள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அமானா வங்கி கணக்கு இலக்கம்
MSM.NASIR, AM.NIHARA,
AMANA BANK, ERAVUR.
A/C: 011 0199728001
நிஹாரா -0779160745
நஸீர்——0773485525

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *