Breaking
Wed. Dec 17th, 2025

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றி நிச்சயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றி குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வெற்றி தொடர்பில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.

வாக்குகளை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளை தொகுதி அமைப்பாளர்கள் எடுக்க வேண்டும். எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குப் பிரச்சினை இல்லாத காரணத்தினால் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் வெற்றிலைச் சின்னத்திற்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related Post