Breaking
Mon. Jun 17th, 2024

 அனைத்து வகையான வசதிகளும் உள்ளடக்கப்பட்டதாக ஸ்மார்ட் கைப்பேசிகள் மாறியுள்ள நிலையில் சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றினை பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறிருக்கையில் இவ்வருட முடிவில் 136 பில்லியன் ஆபாச வீடியோக்கள் பார்வையிடப்பட்டிருக்கும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றில் ஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களும் சராசரியாக 348 ஆபாச வீடியோக்களை பார்வையிட்டிருப்பார்கள் என புள்ளிவிபரங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த எண்ணிக்கையானது மேலும் ஐந்து வருடங்களில் 55 சதவீதத்தினால் அதிகரித்திருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐந்து வருடங்களில் 4G தொழில்நுட்பம் மற்றும் WiFi என்பன அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடியதாக காணப்படுவதனாலே இந்த எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஹாராமான செயழலில் இருந்து எம்மையும் எமது குடும்பத்தாரையும் பாதுகாப்போமாக!

Related Post