Breaking
Mon. May 6th, 2024
ஐக்கிய அரசு தொடர வேண்டு மானால் ஹமாஸ் அமைப்பு காசாவில் தனது செயற்பாடுகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசாவை ஆளும் 27 பிரதி அமைச்சர்கள் கொண்ட நிழல் அரசு குறித்து அதிருப்தி வெளியிட்ட அப்பாஸ் அங்கு ஒரு அரசுதான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இஸ்ரேல் முன்னெடுத்த 50 நாள் தாக்குதலில் இருந்து காசா மீண்டு வருகிறது. இந்த மோதலில் 2,100க்கும் அதிகமான பலஸ்தீனர் கொல்லப் பட்டதோடு 66 இஸ்ரேல் படையினர் மற்றும் இஸ்ரேலின் ஏழு சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.
காசா ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு அப்பாஸ் தலைமையிலான நிர்வாகம் மேற்குக் கரையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இரு தரப்புக்கும் இடையில் பல ஆண்டுகள் முருகல் இருந்த போதும் கடந்த ஏப்ரலில் நல்லிணக்க உடன்பாடு கைச்சாத்தானது.
கடந்த ஜ{ன் 2 ஆம் திகதி ஐக்கிய அரசொன்று பொறுப்பை ஏற்றவுடன் ஹமாஸ் அரசு அதிகாரத்தில் இருந்து உத்தியோகபு+ர்வமாக விலகியது. எனினும் நடைமுறையில் காசா தொடர்ந்து ஹமாஸின் கட்டுப்பாட்டி லேயே உள்ளது. பெரும்பாலான ஐக்கிய அரசின் உடன்படிக்கைகள் இன்னும் அமுலுக்கு வரவில்லை.
பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோவை சென்றடைந்த அப்பாஸ் குறிப் பிடும்போது, “இந்த வழியில் தொடர்ந்தும் எம்மால் ஹமாஸ{டன் இணைந்து செயற்பட முடியாது. 27 அமைச்சுகள் காசாவில் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐக்கிய அரசினால் களத்தில் எதுவும் செய்ய முடியாது” என்றார்.
இஸ்ரேலின் ஹரட்ஸ் பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட ஹமாஸ் பேச்சாளர் சமி அபு+ சுஹ்ரி குறிப்பிடும் போது, தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அப்பாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
அப்பாஸின் பத்தாஹ் நிர்வாகத்துடனான முரண்பாட்டை களைவதற்கான சமரச பேச்சுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றார்.
காசாவில் இருக்கும் பலஸ்தீன மக்களின் வேதனையை அகற்ற பலஸ்தீன தலைமைகள் தம்மாலான அனைத்தையும் செய்யும் என்று அப்பாஸ் உறுதி அளித்துள்ளார்.
காசா முகம் கொடுத்திருக்கும் அழிவை கட்டியெழுப்ப 15 ஆண்டுகள் வரை எடுக்கும் என்றும் 7 பில்லியன் டொலர்கள் வரை தேவை என்றும் அப்பாஸ் குறிப் பிட்டுள்ளார்.
கடந்த 2009 மற்றும் 2012 இஸ்ரேல்-காசா மோதலை விடவும் இந்த முறை 100 மடங்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் விபரித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *