Breaking
Fri. May 10th, 2024
மியன்மாரில் மதக்கலவரம் இடம்பெற்ற ரகினே மாநிலத்தில் பல டஜன் பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய பாடசாலைகள் (மத்ரசா) உட்பட 3000க்கும் அதிகமான கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் புதிடொங் மற்றும் மொங்டோ நகரங்களில் அண்மைய ஆண்டுகளில் சட்டவிரோத கட்டடங்கள் அதிகரித்திருப்பதாக குறிப்பிடும் பாதுகாப்பு மற்றும் எல்லை விவகாரங்களுக்காக மாநில அமைச்சர் கேணல் ஹிடைன் லின், நிலைமை கட்டுப்பாட்டை மீறும் முன்னர் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த இரு நகரங்களிலும் 12 சட்டவிரோத பள்ளிவாசல்கள் மற்றும் 35 சட்டவிரோத முஸ்லிம் பாடசாலைகள் இருப்பதாக மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.
மியன்மாரில் மிக வறுமையான மாநிலமாக உள்ள ரகினேவில் சுமார் 125,000 நாடற்ற ரொஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற பெளத்தர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான மதக் கலவரம் காரணமாக பெரும்பாலான ரொஹிங்கியாக்கள் தற்காலிக முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
1962இல் இராணுவ அட்சி ஏற்பட்டபோது மாநிலத்தில் பள்ளிவாசல், மதப் பாடசாலைகள் கட்ட தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *