Breaking
Thu. May 2nd, 2024
2016ஆம் ஆண்டு நவம்பருக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என்று முன்னாள் பிரதமநீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தேர்தல்கள் ஆணையாளர் குறித்த முயற்சியை மேற்கொண்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யப்போவதாக சரத் என்.சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பின் 31.2 சரத்தின்படி இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடமுடியாது.
எனினும் இது 2010ஆம் ஆண்டில் 18வது சீர்திருத்தம் மூலம் மாற்றம் செய்யப்பட்டது.
எனினும் 18வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதி இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கலாம் என்ற அம்சம் அந்த 18வது அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவில்லை.
இந்தநிலையில் 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துதை தடுக்க நடைமுறை ஜனாதிபதிக்கு அரசியல் அமைப்பில் அதிகாரம் இல்லை என்றும் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். (jm)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *