Breaking
Mon. Dec 15th, 2025

தெற்காசியாவில் தமது இயக்கத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அல் கைய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஷாவாஹிரி தெரிவித்துள்ளார்.

தமது குழுவின் இந்திய கிளை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் தென்காசியாவில் ஜிகாத்தின் கொடி உயர்த்தப்பட்டுள்ளதாக வீடியோ காட்சியொன்றின் மூலம் அவர் அறிவித்துள்ளார்.

ஆப்கான் தலைவர் முல்லா ஒமரிற்கான ஆதரவு புதுப்பிக்கப்படும் என இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சியில் அவர் கூறியுள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஒரு பகிரங்க மிரட்டலாக ஷாவாஹிரியின் இந்த வீடியோ காட்சி அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

உலகளாவிய ரீதியிலான கிளர்ச்சியை முன்னெடுக்கும் அல் கைய்தா இயக்கத்திற்கு ஐ எஸ் கிளர்ச்சியாளர்கள் சவாலை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Post