Breaking
Mon. Dec 8th, 2025

பாகிஸ்தானை சேர்ந்தவர் பள்ளி மாணவி மலாலா கைபர் பக்துங்வா மாகாணத்தில் வசித்து வந்த இவர் தலீபான்களின் தடையை மீறி, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.இதன் காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ந் திகதி பள்ளிக்கூட பேருந்தில் மலாலா பயணம் செய்த போது தலீபான்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், லண்டனில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தின் மூலம் அவர் உலகமெங்கும் பிரபலம் ஆனார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிற அவர், தலீபான்களின் தொடர் மிரட்டல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது.சம்பவம் நடந்து முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், மலாலா தாக்குதலுக்கு காரணமான 10 தலீபான்களை இராணுவம் அடையாளம் கண்டு, கைது செய்துள்ளது. அதை இராணுவ பத்திரிகை பிரிவு தலைவர் ஆசிம் பஜ்வா, இஸ்லாமாபாத்தில் நேற்று அறிவித்துள்ளார்.

Related Post