Breaking
Sun. Dec 14th, 2025

 முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் 30 அடி ஆழமான வீட்டு கிணற்றுனுள் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.

பிரசாதினி ஜனிஸ்கர் என்ற ஒரு வயதும் 2 மாதங்களும் நிரம்பிய குழந்தை தவறுதலாக கிணற்றுக்குள் வீழ்ந்ததை அவதானித்த உறவினர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அருகில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சாதூரியமாகச் செயற்பட்டு குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.

தற்போது காப்பாற்றப்பட்ட குழந்தை முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related Post