Breaking
Sat. Dec 20th, 2025

கொடிய உயிர்க்கொல்லி நோயான எபோலாவை கட்டுபடுத்த போராடும் நாடுகளுக்கு பேஸ்புக் நிறுவுநர் மார்க் ஷுக்கர் பெர்க் ரூ.150 கோடி நிதி உதிவி அளிக்க போவதாக அறிவித்துள்ளார்.

எபோலா நோய் தாக்கி மேற்கு ஆபிரிக்க நாடுகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்ழள்ளனர். 9,000 பேர் அந் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எபோலா பரவாமல் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் எபோலா நோய் தாக்கி மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளான கினியா, லைபீரியா, சியராலியோன் உள்ளிட்ட நாடுகளுக்கு உதவும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷுக்கர் பெர்க்கும் அவரது மனைவியும் இனைந்து ரூ.150 கோடி நிதிஉதவி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

எபோலா நோயை கட்டுப்படுத்த அமெரிக்காவில் செயற்பட்டு வரும் மையங்கள் மூலம் அவர்களுக்கு இந்த நிதிஉதவி அளிக்கப்படும் என பேஸ்புக் நிறுவனர் தெரிவித்துள்ளார். இதனிடையே எபோலா நோயை கட்டுபடுத்த துரித நடவடிக்கைகளை எடுக்கபட வில்லை எனில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 4 வாரங்களில் வாரத்துக்கு புதிய ஆயிரம் எபோலா நோயாளிகள் உருவாகியுள்ளதாகவும், அந்நோயை கட்டுபடுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் எபோலா ஒரு பேரழிவு சக்தியாக உருவெடுத்துவிடும் உலக சுகாதாரம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

Related Post