Breaking
Mon. Apr 29th, 2024

8 முஸ்லிம் மாணவிகள் ஆணைக்குழுவில் அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு பதிவு
நுவ­ரெ­லியா புனித சேவியர் கல்­லூ­ரி­யி­லி­ருந்து 2016 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சை விஞ்­ஞானப் பிரிவில் பரீட்சை எழு­திய 8 முஸ்லிம் மாண­விகள் தமது பரீட்சைப் பெறு­பேறு வெளி­யி­டப்­ப­டாது பரீட்சைத் திணைக்­க­ளத்­தினால் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­மைக்கு எதி­ராக அடிப்­படை உரிமை மீறல் முறைப்­பாட்­டினை கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் பதிவு செய்­தனர்.

மாண­வி­க­ளது சார்பில் அவர்­க­ளது பெற்றோர் முறைப்­பாட்­டினைச் சமர்ப்­பித்­தனர். க.பொ.த. (உ/த) பரீட்சை முடி­வுகள் பரீட்சைத் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்டு 14 நாட்­க­ளா­கியும் தமது பரீட்சை முடி­வுகள் இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை எனவும் இதனால் தாம் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தகுதி பெற்­றி­ருந்­தாலும் தமது பல்­க­லைக்­க­ழக வாய்ப்பு தவ­று­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­கி­றது. இது அடிப்­படை உரிமை மீறல் என அவர்கள் முறைப்­பாட்டில் தெரி­விக்­கி­றார்கள்.

முறைப்­பாட்டில் பிர­தி­வா­தி­க­ளாக வலயக் கல்விப் பணிப்­பாளர், மாகா­ண­கல்விப் பணிப்­பாளர்,பரீட்­சைகள் ஆணை­யாளர் என்போர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

நுவ­ரெ­லியா மாவட்டப் பாட­சா­லை­யி­லி­ருந்து பரீட்சை எழு­திய 27 மாண­வர்­களின் பரீட்சை முடி­வுகள் இவ்­வாறு தடுத்து நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. இவர்­களில் 99 வீதத்­தினர் முஸ்லிம் மாண­வர்­க­ளாவர். நுவ­ரெ­லியா, குரு­நாகல், புத்­தளம், அநு­ரா­த­புரம் ஆகிய மாவட்டப் பாட­சா­லை­களில் பரீட்சை எழு­திய 81 தமிழ் மொழி மூல பரீட்­சார்த்­தி­களின் பரீட்சை முடி­வுகள் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவர்கள் வெளி­மா­வட்­டங்­க­ளி­லி­ருந்து வந்து பரீட்சை எழு­தி­ய­வர்கள் என கூறப்­ப­டு­கி­றது.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை முறைப்­பாட்­டினை பதிவு செய்­வ­தற்கு வருகை தந்த பெற்றோர் ஒருவர் “விடி­வெள்ளி”க்கு கருத்துத் தெரி­விக்­கையில் “நான் பதுளை மாவட்­டத்தைச் சேர்ந்­தவன். பது­ளையில் உயி­ரியல் விஞ்­ஞானம் போதிக்க ஆசி­ரியர் பற்­றாக்­கு­றை­யினால் எனது மகளை நுவ­ரெ­லியா புனித சேவியர் பாட­சா­லையில் அனு­ம­தித்து உயர்­தரம் படிக்க வைத்தேன். அங்­கேயே பரீட்­சையும் எழு­தினார். ஆனால் பரீட்சை முடி­வுகள் தடுத்து நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை வெளி­மா­வட்­டங்­க­ளி­லி­ருந்து வந்து பரீட்சை எழு­திய மாண­வர்­களின் பரீட்சை முடி­வுகள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளது என்று கூற­மு­டி­யாது. எனது மக­ளுடன் பரீட்சை எழு­திய வெளி­மா­வட்ட மாண­வர்­களின் பரீட்சை முடி­வுகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

பரீட்சை முடி­வுகள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­பதில் எனக்கு சந்­தேகம் நில­வு­கி­றது. தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் மாண­வர்­களின் இஸட்ஸ்கோர் அதி­க­மாக இருக்க வேண்டும். இவர்­க­ளது பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைத் தடுப்­ப­தற்­கா­கவே இந்தச் சூழ்ச்சி எனக் கரு­து­கின்றேன்.

இது தொடர்­பாக நாங்கள் பரீட்சை ஆணை­யா­ளரைச் சந்­தித்தோம். முறை­யிட்டோம். கல்வி அமைச்சின் செய­லா­ள­ரது உத்­த­ர­வுப்­ப­டியே பரீட்சை முடி­வுகள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் கூறினார். எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் மாண­வர்­களை அழைத்து விசா­ரணை ஒன்று நடத்­த­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

பரீட்சை நடந்து 6 மாதங்கள் கடந்­துள்­ளன. பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டு 14 நாட்கள் ஆகின்றன. இவ்வளவு காலம் கடந்த பின்பு கல்வி அமைச்சுக்கு இவர்கள் வெளிமாவட்ட மாணவர்கள் என தெரியவந்துள்ளதா? இந்த ஏற்பாடு முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழைவதைத் தடுப்பதாகும். இதற்கெதிராக முஸ்லிம் அரசியல் வாதிகள் குரல்கொடுக்க வேண்டும்” என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *