Breaking
Sat. Dec 13th, 2025

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில், அவருக்கு பிணை கிடைத்த செய்தி வெளியானதுமே கவர் போட்டோவை மாற்றி விட்டனர்.

நிம்மதி தவழும் முகத்துடன் கூடிய ஜெயலலிதா படத்தை தற்போது போட்டுள்ளனர். அதேபோல வெல்கம் ஹோம் அம்மா என்றும் ஒரு போட்டோ ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.

ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு வரை ஜெயலலிதா தொடர்பான நிகழ்ச்சிகள், அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள், தொடக்க விழாக்கள், அதிமுக விழாக்கள், பிரசாரம் என படம் படமாக போட்டு வந்தனர் இந்த பக்கத்தில் இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால பிணை அளித்துள்ளதைத் தொடர்ந்து பக்கத்திற்கு புது மெருகு வந்து விட்டது. கவர் படத்தை மாற்றியுள்ளனர்.

மேலும் அம்மா வெல்கம் ஹோம் என்றும் ஜெயலலிதா படத்துடன் ஒரு ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.

Related Post