Breaking
Sat. Dec 13th, 2025

அஷ்ஷேக் கைஷான் ரஷாதி அவர்களின் தலைமையின் கீழ் ப.உ. அல்ஹாஜ் இஷாக் ரஹுமான், Dr.சனிக், Dr. சாபி சிஹாப்தீன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கும் “ஹையதுல் ஹுதா” தொண்டு நிருவணத்தின் மூலம் அநுராதபுர மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டன.

ப.உ. அல்ஹாஜ் இஷாக் ரஹுமான், ஹையதுல் ஹுதா நிருவணத் தலைவர் அஷ்ஷேக் கைஷான் ரஷாதி மற்றும் Dr. சாபி சிஹாப்தீன் ஆகியோர் கடந்த காலங்களில் சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது அந்நாட்டின் அல்-ராஜ் வங்கியின் அதிபரின் மகனுடனான சந்திப்பின் பலனாக அநுராதபுர மாவட்ட முஸ்லிம் மக்களிற்காக 20,000 K.G. பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டது.

இவ்விடயமாக என்னோடு செயற்பட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, இப் புனித நோன்பு காலத்தில் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு உங்களிடத்தில் அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

Related Post