Breaking
Sat. May 18th, 2024
இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தி விற்பனை செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள நடைபயணம் நிட்டம்புவ நகரிலிருந்து இன்று தொடர்கின்றது. இந்த நடைபயணம் கண்டியில் ஆரம்பமாகியதோடு, தொடர்ச்சியாக 5 நாட்களாக கொழும்பு நோக்கி  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதிதிரட்டும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும், மாலபே SAITM என்ற பட்டத்தை விற்பனை செய்யக்கூடாது போன்ற 6 கோரிக்கைகள் மாணவர்களால் முன்வைக்கப்பட்டு இந்த நடைபயணம் நடத்தப்படுகின்றது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *