Breaking
Fri. May 3rd, 2024

போரின் பின்னரும் 6 வருடங்களாக தமது சொந்த வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வாழும் சுமார் ஒரு லட்சம் பேர் 6 மாதங்களுக்குள் சொந்த இடங்களில் வீடுகள் அமைக்கப்பட்டு குடியமர்த்தப்படுவர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஏஎப்பி செய்திச்சேவைக்கு நேற்று வழங்கிய செவ்வியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த உறுதிமொழியை அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்தோர் முகாமில் வைத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளவர்களை மீண்டும் குடியமர்த்துவதை இலக்காக கொண்டுள்ளதாகவும், 6 மாதங்களுக்குள் அவர்களை மீள்குடியமர்த்தும் பொறிமுறையை தாம் ஏற்படுத்தவுள்ளதாகவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு காணிகள் வழங்கப்படும். கடந்த 25 வருடங்களாக அவர்கள் வேறு இடங்களில் தங்கியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே இந்த பிரச்சினையை தாம் தீர்த்து வைக்கவுள்ளதாக சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்காக வடக்கு கிழக்கில் படையினர் வசம் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்னும் இரண்டு வாரப் பகுதியில் இது தொடர்பான பணிகள் ஆரம்பமாகும்.

போர்க் குற்றச்சாட்டு தொடர்பான பொறிமுறை குறித்து கருத்துரைத்த அவர், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எனினும் அதற்கு சில காலம் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறும் விடயத்தில் அவசரத்தை காட்ட முடியாது. சிலர் இதனை உடனடி நூடில்ஸ் போன்ற நினைக்கிறார்கள். எனினும், அவ்வாறு தம்மால் செயற்பட முடியாது. சட்டம் ஒழுங்குக்கு ஏற்பவே இந்த விடயத்தில் செயற்பட முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே நாட்டின் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளமையை அடுத்து சர்வதேசம் இலங்கை தொடர்பில் மேற்கொண்டு வந்த நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் மைத்திரிபால ஏஎப்பியிடம் தெரிவித்துள்ளார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *