
vanni





அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியில் சீன அரசின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைக் கட்டிடம்!!!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார், தாராபுரம் துருக்கி சிட்டி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 02 மாடி பாடசாலைக் கட்டிடம் இன்று (28/ 11/2017) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் முஜாஹிரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக அமைச்சரின் பிரதிநிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான சீன…

மன்னார் வேப்பங்குளம் அல் இக்ரா பாடசாலை திறப்பு விழா
-A.R.A.றஹீம் – மன்னார் வேப்பங்குளம் அல் இக்ரா பாடசாலை நேற்று வடமாகாண சபை உறுப்பினரும் மாகாணசபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஜப்பான் , மற்றும் யு என் ஹெபிடேட் நிறுவனத்தினால் 4,200,000 டொலர்கள் பெறுமதியான தொகையில் இப் பாடசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது சுகாதார வசதிகள் அனைத்தும் கொண்டு நவீன…

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த பாடுபடுவேன் : அமைச்சர் றிஷாட்
-அமைச்சின் ஊடகப்பிரிவு – வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தி;யாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் கே.எம்.பைசர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கூறியதாவது வவுனியா மாவட்டத்தில் குறிப்பாக சாளம்பைக்குளப் பிரதேசம் இன ஐக்கியத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது. தமிழ் முஸ்லிம் உறவுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இந்தக்…

அரபா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி; பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்
-ஊடகப்பிரிவு வவுனியா புளிதறித்த புளியங்குளம், அரபா-மகா-வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், வி ஜயதிலக, வவுனியா மாவட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் ஒஸ்மானியா மாணவர்கள் போராட்டம்
-என்.எம். அப்துல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே! யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் உணர்வுபூர்வமான போராட்டம் ஒன்று (2017.02.20) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்டெடுக்கும் நோக்கில் 20 நாட்களுக்கும் மேலாக நடாத்திவரும் உணர்வுபூர்வமான போராட்டத்திற்கு வடமாகாண கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைய ஆதரவு தெரிவித்து வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பல இடங்களில் இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள 50…

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டத்தை அ.இ.ம.கா. ஆதரிக்கிறது
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்களின் வாழ்வு நிலங்களை பாதுகாப்பு படையினரிடம் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் மண் மீட்புப் போராட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரித்து நிற்கிறது. எஸ். சுபைர்தீன் செயலாளர் நாயகம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

வில்பத்தில் முஸ்லிம்கள் குடியேறவில்லை: வடமாகாணசபையில் பிரேரணை
-பாறுக் ஷிஹான் வில்பத்து காட்டில் காடழிப்பு செய்து முஸ்லீம் மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் எனும் குற்ற சாட்டில் உண்மை இல்லை என வடமாகாண எதிர்கட்சி உறுப்பினர் அ.ஜெயதிலக சபையில் பிரேரணை ஒன்றினை முன் மொழிந்தார். வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார். மன்னார் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வசித்த முஸ்லீம் மக்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலை புலிகளினால் வெளியேற்றப்பட்டு…

தாராபுரம் அல்-மினா முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி
மன்னார் தாராபுரம் அல் – மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர், திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் (18) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.