Breaking
Mon. May 20th, 2024

இந்தியாவில் தொழில்நுட்ப கற்கைகளுக்கு புகழ் பெற்ற நிறுவனமாகிய Indian Institutes of Technology (IITs)யில் திறமை மிக்க இலங்கையைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை 2017-2018 கல்வி ஆண்டிலிருந்து ஏற்படுத்திக் கொடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது சம்பந்தமாக Indian Institutes of Technology (IITs) யின் விரிவுரையாளர்கள் அடங்கிய குழு ஒன்று செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடலை நடாத்தவுள்ளது.

இக்கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இலங்கையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களும், தோற்றவுள்ள மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், பொறியியல் பீடங்களில் இறுதி மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து பயன்பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல்களில் பொறியியலில் இளமாணி மற்றும் முதுமாணிக் கற்கைகளுக்கான நுழைவுத் தேர்வுகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்படும்.

இதில் கலந்துகொண்டு பயன் பெற உள்ளவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, எதிர்பார்க்கும் கல்விநிலை இளமாணி கற்கைகளா? முதுமாணி கற்கைகளா?, தொலைபேசி இலக்கம் முதலியவற்றை குறிப்பிட்டு செப்டம்பர் 4ஆம் திகதி காலை 9.00 மணிக்கு முன்னதாக மின்னஞ்சல் அனுப்பிவைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் கலந்துரையாடலில் பங்கு கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும். கலந்துரையாடல் நடைபெறும் இடம் மற்றும் நேரம் என்பவை பதிவுகளை மேற்கொண்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் அறியத்தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *