Breaking
Thu. May 2nd, 2024

– முஹம்மட்-

பொத்துவில் பிரதேசம் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை இழந்து தவிக்கின்ற நிலையையும், கடந்தகால மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மாகாண சபையில் போட்டியிட்ட எமது மாமாவை தோற்கடிக்க சதித்திட்டம் செய்த தலைமையை நாங்கள் மறக்க முடியாத நினைவுகளுடன் நான் இந்த இடத்திலே மிகவும் சோகமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளளேன்.

இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்திலே முதல் தடைவையாக இந்த பிராந்தியத்தில் இருக்கின்ற கட்சிகளுக்கு சவாலாக களம் இறங்கியுள்ளது அதன் முதன்மை வேட்பாளராக எனது மாமாவான எஸ்.எஸ்.பீ.மஜீட் அவர்களை இந்த கட்சி உள்வாங்கி நிறுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை தமக்கு தேவையான போது ஒவ்வொருவர்களையும் உள்வாங்கி கருவேப்பிலை போன்று பாவித்து வீசுகின்ற அந்த காலகட்டங்களை நினைவுகூர விரும்புகின்றேன்.

எனக்கு நடந்த சம்பவங்களை நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள் வெறும் 45 நாட்களுக்குள் அரசியலுக்குள் புகுந்து கல்முனை மாநகரத்தின் முதல்வராக எங்களுடைய மண் என்னை அந்த ஆசனத்தில் அமரவைப்பதற்கு பட்டபாடு உங்கள் எல்லோருக்கும் தெரியும் அந்த சவால்கள் எல்லாவற்றையும் வெற்றி கொண்ட போதிலும் முதல்வர் பதவியை பெறுவதற்கு கடைகளை மூடி ஹர்தால் செய்ய வேண்டிய நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ் எமக்கு துரோகம் செய்தது. அந்த பதவியை பெற்றதன் பின்பு இரண்டு வருடங்களில் என்னை இராஜினாமா செய்யும்படி கட்சியின் தலைமை என்ன உத்தரவுவிட்டது.

அந்த கட்சியின் உத்தரவுக்கமைய நான் ஒருவாரகால அவகாசம் கேட்டேன் நான் என்னுடைய ஆதரவர்கள், குடும்பத்தினர் நண்பர்கள் ஆகியோர்களிடம் சென்று கலந்தாலோசித்தது விட்டு நிச்சயமாக இராஜமா செய்கின்றேன் என்று கட்சியின் தலைமையிடம் கேட்டபோது சரி எனக் கூறிய தலைமை ஒரு வாரகாலம் இடைவெளி தராமல் வெள்ளிக்கிழமை தீடீரென என்னை கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.

இன்று இந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நல்லவர்கள், படித்தவர்கள், சமூகத்திற்காக சேவை செய்கின்றவர்கள் போன்றோரை தொடர்ந்தும் இந்த கட்சிக்குள் நீண்டகாலம் வைத்துக் கொள்வதில் அச்சம் ஏற்பட்டதன் காரணமாகவே எம்மை போன்றவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளோம். அதற்கு மாற்றுக் கட்சியாக ஒரு சவலாக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த மாவட்டத்தில் முதல்முறையாக களம் இறங்கி அதில் வேட்பாளராக நாம் போட்டியிட தயாராகி இருக்கின்றோம். நாங்கள் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள்தான் அதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

மறைந்த மாமனிதர் மர்ஹ{ம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் ஹதீஸ் குர்ஆன்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு 30 வருடங்களாக நாங்கள் வாக்களித்த கட்சி இன்று எந்த திசையை நோக்கி செல்லுகின்றது என்பதை சற்று பார்க்க வேண்டும் இதற்காகத்தான் சொல்லுகின்றோம் 30 வருடங்களாக நாங்கள் வாக்களித்த அந்த கட்சி அந்த தலைமை இன்று இருக்கின்ற தலைமை யோசித்துப் பாருங்கள் நான் நாகரீகமான முறையில் அரசியல் செய்பவன் என்ற வகையில் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எவரையும் அநாகரீக முறையில் எந்த மேடையிலும் பேசிய வரலாறு கிடையாது ஆனால் நிஜத்தை நிஜம் என்று கூறுகின்றேன்.

அந்த கட்சி செய்து கொண்டு இருக்கின்ற அந்த நிலைமைகளை பாருங்கள் நாங்கள் திகாமடுல்ல மாவட்டத்தில் கடந்த காலத்தில் இரண்டு பிரதிநிதித்துவத்தை இரண்டு முறை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பிரதிநிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பிருக்கின்றோம் அவர்கள் என்ன செய்து இருக்கின்றார்கள் சற்று சிந்துபாருங்கள் கல்முனை தொகுதிக்கு என்ன செய்து இருக்கின்றார்கள் திகாமடுல்ல மாவட்டத்திற்கு என்ன செய்து இருக்கின்றார்கள் அந்த பாராளுமன்றத்தில் என்ன பேசி இருக்கின்றார்கள் நீங்கள் எல்லோரும்

யோசித்து பார்க்க வேண்டும் வேறுமனே அந்த உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டு வருகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக நாங்கள் இவர்களை பாராளுமன்றத்தில் காண்கின்றோம்;
நல்லவர்களை, படித்தவர்களை, சமுகத்திற்காக சிந்திக்கின்றவர்களை உள்ளச்சம் உள்ளவர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்; களம் இறங்கியுள்ளோம் நிச்சயமாக நீங்கள் எல்லோரும் நன்றாக சிந்தித்து இந்த முறை எங்களுக்கு ஒரு சந்தர்பத்தினை தரவேண்டும் அதன் மூலம் நாங்கள் இந்த முறை ஒரு ஆசனம் பெறுவது உறுதியாக இருக்கின்றன.

இரண்டாவது ஆசனத்தினை பெற நகர்ந்து கொண்டு செல்கின்றோம் நாங்களும் சரியாக செய்யவில்லை என்றால் எங்களையும் அடியோடு அழித்து விடுங்கள் நாங்கள் அப்படிப்பட்ட தலைமையோடு சேரவில்லை எமது தலைவர் என்னுடைய பாடசாலை வாழ்க்கையில் நெருங்கி பழகிய நண்பர் என்பதால் அவருடைய சகல விடயங்களும் எனக்கு தெரியும். ஏழை எழிய மக்களின் எல்லா விடயங்களையும் தெரிந்து கொண்டு அரசியல் செய்ய வந்தவர் புதன்கிழமைகளில் அவருடைய அமைச்சுக்கு சென்று பாருங்கள் எத்தனை பேர் சந்திக்க நிற்பார்கள். வருகின்ற அனைவரையும் சந்தித்து நேரத்தினை கணக்கெடுக்காமல் அனைவருடைய பிரச்சினையையும் தீர்த்துவிட்டு செல்லுகின்ற தலைமை அந்த தலைமையின் கீழ் ஒன்றுபட்டு இருக்கின்றோம்.

ஆகவே நீங்கள் எங்களுடைய கட்சிக்கு தயவு செய்து இந்த தேர்தலில் இந்த மண்ணிலே பிறந்த எங்களுக்கு சந்தர்ப்பத்தை தந்தால் சாதித்து காட்டுவோம். ஆனால் நாங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வெற்றிப் பயணத்தை அடைவோம் என முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேடபாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பொத்துவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *