Breaking
Sun. May 19th, 2024
ங்கள் நாட்டு சட்டத்தை பற்றி விமர்சிக்க யாருக்கும் அருகதையும் கிடையாது என்று அமெரிக்காவில் நடைபெற்ற சட்ட நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் சவூதி அரேபியாவுக்கான நீதி அமைச்சர் ‘முஹம்மது அல் ஈசா’ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எங்கள் நாட்டின் சட்டதிட்டங்கள் இறைமறையான திருக்குர்ஆனுக்கு உட்பட்டதாக இருக்கின்றது. இறைவனால் இவ்வுலக மக்களுக்கு அருளப்பட்ட சட்டங்களையே நாங்கள் எங்கள் நாட்டில் கடைப்பிடிக்கின்றோம் என கூறியுள்ளார். முஹம்மத் அல் ஈஸா மேலும் கூறுகையில்,
எமது நாட்டின் சட்டங்களை இழுவுபடுத்தியும், மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட சட்டங்களை எமது நாடு கடைப்பிடிப்பதாகவும் உலக ஊடகங்களும், மனித உரிமை அமைப்புக்களும் தவறாக எங்களை விமர்சித்து வருகின்றனர்.
இதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆளுமைமிக்க ஒரு நல்ல மனித
சமுதாயத்தைக் கட்டிக்காக்க திருக்குர்ஆனின் சட்டங்கள் இவ்வுலகிற்கு இன்றியமையாதவை. இஸ்லாம் பற்றியும், திருக்குர்ஆன் பற்றியும் அறியாத பல மேற்கத்தியர்கள் இஸ்லாம் மீதுள்ள பொறாமையில், சவுதி அரேபியாவின்
சட்டங்களை மாத்திரம் எதிர்த்து வருகின்றனர். விமர்சித்தும் வருகின்றனர்.
எங்களது சட்டங்கள் எப்போதும் மனித உரிமைகளுக்கு எதிரானது அல்ல. சட்டத்திற்கு அமைய குற்றவாளிகளின் தலையைத் துண்டிப்பதையும், கையைத்துண்டிப்பதையும் சவுதி நிறுத்த வேண்டும். இதற்கு மாறாக வேறு சட்டங்களை ஏற்படுத்துங்கள் என எங்களை பலர் வற்புறுத்துகின்றனர். ஆனால், இச்சட்டங்களை, தண்டனைகளை எங்களால் மாற்ற முடியாது.
ஏனெனில் குர்ஆனில் உள்ள சட்டங்களை மாற்றும் அதிகாரம் எங்களுக்குக் கிடையாது. தலைகளை துண்டிப்பதோ, கைகளை துண்டிப்பதோ, எங்களது சுய லாபத்திற்கு அல்ல. சந்தேகத்திற்கிடமான குற்றவாளிகள் எவருக்கும் நாங்கள்
இத்தண்டனைகளை வழங்குவதில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே இறைவனின் பெயரால் இத்தண்டணை வழங்கப்படுகிறது.
கடந்த 1400 வருடங்களுக்கும் மேலாக இஸ்லாம் இவ்வுலகில் ஆணித்தரமாக காலூன்றி இருக்கின்றது. இருந்தும் வருகிறது. இஸ்லாத்தில் பொய்களும், மனித உரிமைகளுக்கு எதிரான சட்டங்களும் இருந்தால் இஸ்லாம் இவ்வுலகில் எப்போதே அழிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் பல மில்லியன் கணக்கான மக்கள் இன்றுவரை இஸ்லாத்தில் இணைகின்றனர். இவர்கள் எவரும் உலக மனித உரிமைச் சட்டங்களைப் பின்பற்றி வரவில்லை. மாறாக அல் குர்ஆனைப் படித்து, விவாதித்து,ஆய்வு செய்தே இஸ்லாத்துக்குள் நுழைகின்றனர்.
எனவே இஸ்லாம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் சவுதி அரேபியாவின் சட்டங்களிலும், எங்கள் இறைமைகளையும் விமர்சிப்பதை இத்துடன் உலகம் நிறுத்த வேண்டும் என சவூதி அரேபியாவின் நீதி அமைச்சர் அல் ஈஸா வாஷிங்டனில் இடம்பெற்ற கூட்டமொன்றில் சவூதி அரேபியாவின் சட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உரையாற்றினார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *