Breaking
Fri. May 17th, 2024

காத்தான்குடி அல்மனார் நிறுவனம் நடாத்தும் புனித றமழான் விசேட அறிவியல் போட்டிக்கான வினாக்கொத்துகள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இந்நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனியின் வழிகாட்டலில் நடைபெறும் இச்செயற்றிட்டத்தின் மூலம் இப்புனித மாதத்தில் குர்ஆன், ஹதீதுகளுடன் தொடர்புபட்ட ஒரு சமூக குழாமொன்றை உருவாக்கி அதன் பலனை அவர்களது வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வாழும் உயரிய பணி இதனூடாக கட்டியெழுப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நோன்பு காலங்களில் மார்க்க அறிவினை விருத்தி செய்யும் நந்நோக்கில் இவ்வினாக்கொத்து தற்போது வெளியாக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தடவையாக இத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், புத்தி ஜீவிகளது ஆலோசனைகள் பெறப்பட்டு புதுப்பொலிவுடன் கிழக்கு மாகாண மட்டத்தில் இப்போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வினாக்கொத்துக்களை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கென மாவட்டம் தோறும் முக்கிய பிரதேசங்களிலுள்ள வியாபார ஸ்தலங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

காத்தான்குடி பிரதேசத்தில் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி, அல்-ஜஸீரா புத்தக நிலையம், நூரி புத்தக நிலையம், மாலின்ஸ் புத்தக நிலையம், ஏறாவூரில் அறிவு நூல் நிலையம், ஓட்டமாவடி பிரதேசத்தில் அஸ்லம் புத்தக நிலையம், இன்டநெட்கொம் போன்ற இடங்களிலும் வாழைச்சேனை பிரதேசத்தில் ஹிதாயா புத்தக நிலையம் மற்றும் சதாம் சுப்பர் மார்க்கட் போன்ற இடங்களிலும் மீராவோடை பிரதேசத்தில் சன்ரே கொமினிகேசனிலும் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வினாக்கொத்து செல்லாக்காசுபோன்று பெறுமானமற்று இருந்து விடக்கூடாது என்பதற்காக வினாக்கொத்தொன்றுக்கு அதன் பெறுமதித்தொகையையும் விட குறைந்த தொகையான முப்பது ரூபா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வினாக்கொத்தினை பெற்று பதில்கள் பூர்த்தி செய்யப்பட்டு எதிர்வரும் 03.07.2016 ஆம் திகதிக்கு முதல் புதிய காத்தான்குடி, கடற்கரை வீதி, அல் மனார் நிறுவனத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ ஒப்படைக்க முடியும்.

இப்போட்டியில் வெற்றியீட்டுபவர்கள் 13 நபர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் 100 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்படுகிறது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *