Breaking
Wed. May 1st, 2024

(அஸ்ரப் ஏ. சமத்)

உலக வரலாற்றில் முதல் தடவையாக, குறிப்பிட்ட ஒரு தலைப்பில் 12 மணித்தியாலங்கள் தொடர்ந்து எழுதும் கின்னஸ் உலக சாதனை ஒன்று இடம் பெறவிருக்கிறது.

எதிர்வரும் 2014 ஆகஸ்ட் 30 ஆம் திகதி கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் 1978களில் இருந்து எழுதிவருபவரும், சுதந்திர ஊடகவியலாளரும் வானொலி ஊடகவியலாளருமான அனிஸ்டஸ் ஜெயராஜா ‘கரன்சி (பணநோட்டு) இல்லாத உலகம்’ எனும் தலைப்பில் எழுதி இக்கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளார்.

உலக வரலாற்றில் இதுவரை கின்னஸ் சாதனை விளையாட்;டுப் போன்ற உடலியல் சம்மந்தப்பட்ட துறைகளில் பெருமளவுக்கு நிகழ்த்தப்ட்டுவருகின்றன.

நூல்களின் தொகை, இலக்கங்கள் அல்லது ஸ்ரீராமஜெயம், போன்றவற்றை எழுதுவதுமான விடயங்கள் காணப்பட்டாலும், இலக்கியம் அல்லது எழுத்துத் துறைசார்ந்த முயற்சிகள் கின்னஸ் உலகசாதனை வரலாற்றில் இல்லையென்றே சொல்லலாம்.

அனிஸ்டஸ் ஜெயராஜா ஏற்கனவே இலங்கையின் எழுத்துப் புலத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளாரவார். மறைந்த தலைவர், மாமனிதர் மர்ஹூம். ஆர்ஆ அஸ்ரஃப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு நூல்கள் பலவற்றையும் எழுதி வெளியிட்டார்.

இவரது எழுத்துலகப் பிரவேசம் 1979களிலான ‘சேகுவேரா’ என்ற ஒரு குறு நாவலுடன் ஆரம்பமாகிறது. இதுவரையில் 25ற்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பல்வேறு துறைகளிலும் கால்பதித்துள்ள ஆழமான அனுபவங்களும், நாடுபூராவும் அலைந்து திரிந்து வாழ்ந்த நாடோடி வாழ்க்கையும் இவரது எழுத்துலகப் பலம் எனலாம்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிப் பரிச்சயம் கொண்ட இவரது ஆற்றலை, அவரது படைப்புக்கள் வெளிப்படுத்துகின்றன. முதல் முறையான தனது சாதனை முயற்சி ஒன்று வெற்றிப் பெற,அனைத்து மக்களினதும் ஆசீர்வாதங்களையும் வேண்டி நிற்கின்றார். நாமும் அவருடன் கைகோர்ப்போம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *