Breaking
Sat. May 4th, 2024
எம்.ரீ.எம்.பாரிஸ்
இனங்களுக்கிடையிலானபுரிந்துணர்வு,உரையாடல்,வித்தியாசங்களை மதிக்கும் மனப்பாங்கு,சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவிழுமியங்களை மக்கள் மயப்படுத்துவதே இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

மக்கள் அரங்கநாடகச் செயற்றிட்டத்தின் முதலாம் கட்டம் கடந்தவருடம் மிகவெற்றிகரமாக கிழக்குமாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டது. தேசியமொழிகள் மற்றும் சமூகஒருமைப்பாட்டுஅமைச்சு மற்றும் கிழக்குமாகாணகல்வி அமைச்சு ஆகியன இதற்கு அணுசரனை வழங்கின. இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இதனை அமுல்படுத்தியது.

இதன் இரண்டாவது கட்டம் திருகோணமலை,பொலன்னறுவைமற்றும் கண்டி ஆகியமாவட்டங்களில் கடந்தமாதம் நிறைவூபெற்றது. கிழக்கு,மத்திய மற்றும் வடமத்திய மாகாண கல்வியமைச்சுமற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியன இத்திட்டத்திற்கு உதவின.
இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டத்தின் மூன்றாவதுகட்டம் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அரம்பமாகவுள்ளது. களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள் இதற்காககத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்,சிங்களம்,மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 36 இளைஞர் யுவதிகள் இத்திட்டதில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இவர்களுக்கான 10 நாள் வார இறுதிப் பயிற்சி வெகுவிரைவில் ஆரம்பமாகஉள்ளது. தகுதிவாய்ந்தஇ 35 வயதக்குக் குறைந்த இளைஞர் யுவதிகளுக்குதெரிவின் போது முன்னுரிமை வழங்கப்டும். இப்பயிற்சிநெறி முற்றிலும் இலவசமானது.

நாடகப் பிரதியாக்கம்இநடிப்பு,சமூகஉரையாடல்களை ஒழுங்குசெய்தல் மற்றும் வன்முறைக்கு எதிரானகருத்தாக்கங்களை கலைத்துவமாக வெளிப்படுத்தல் ஆகியவற்றில் ஆர்வமிக்க இளைஞர் யுவதிகள் இப்பயிற்சிநெறிக்கு விண்ணப்பிக்கலாம்..
பயிற்சிமுடிவில் 20 நாடகங்கள் பிரதியாக்கம் செய்யப்படும். அந்நாடகங்கள் யாவும் களுத்துறை இகாலிமற்றும் மாத்தறைமாவட்டங்களைச் சேர்ந்த 30 பாடசாலைகளில் அரங்கேற்றப்படும். தெரிவு செய்யப்படும் பாடசாலைகளில் நடமாடும் கலையகங்களும் ஆற்றுகைதளங்களும் இதற்கெனஉருவாக்கப்படும்.

தெரிவு செய்யப்படும் இளைஞர் யுவதிகள் கிராமங்கள் தோறும் சென்று நடிக்கும் போதுஅவரகளுக்குரிய தங்குமிடம் இபோக்குவரத்து,உணவு வசதிகளுடன் சிறுதொகை நாளாந்தகொடுப்பனவையும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் வழங்கும்.
மேற்சொன்ன மாவட்டங்களைச் வசிக்கும் தகுதிவாய்ந்த இளைஞர் யுவதிகள் மேமாதம் 30 ஆம் திகதிக்குமுன்னர் கிடைக்கக் கூடியதாக தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிப்போர் [email protected] என்ற முகவரியை பயன்படுத்தலாம்.
தபால் மூலம் விண்ணப்பிப்போர் செயற்றிட்டஅதிகாரிஇமக்கள் அரங்கநாடகச் செயற்றிட்டம்இ இலங்கைஅபிவிருத்திக்கானஊடகவியலாளர் மன்றம்இ இலக்கம் 429,2/1இநாவலவீதி இராஜகிரிய என்ற முகவரிக்குவிண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். மேலதிகவிபரங்களுக்கு 0776653694 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *