Breaking
Mon. Apr 29th, 2024
2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ் சத்யார்த்திக்கும், 17 வயது பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கும் கூட்டாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொள்ளும் இன்னொருவரான மலாலா பாகிஸ்தானின் சுவாத் மாவட்டத்தில் உள்ள மின்கோரா நகரில் 1997-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி பிறந்தார். இவருடைய தந்தை ஜியாவுதீன்- தாயார் தோர் பேகை. இவருக்கு 2 தம்பிகளும் உண்டு. தற்போது இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகரில் வசித்து வருகிறார்.
17 வயதில் நோபல் பரிசு பெற்று இருப்பதன் மூலம், மிகக் குறைந்த வயதில் இப்பரிசை பெற்றவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.
இது பற்றி மலாலா  கூறியதாவது;
உண்மையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். அமைதிக்க்கான நோபல் பரிசு பெறுவதில் நான் பெருமை அடைகிறேன். தலீபான்கள் சுடபட்ட போது ஆதரவு தந்த மக்களுக்கும், மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும், சமுதாயத்திற்க்கும் கண்டிப்பாக என்னால் முடிந்த உதவிகளை செய்ய விரும்கிறேன் என்று கூறினார்.
நோபல் பரிசு அறிவிக்கும் போது நான் வேதியல் பாட வகுப்பில் இருந்தேன். என்னிடம் செல்போன் எதுவும் இல்லை  எனக்கு நோபல் பரிசு அறிவித்ததாக ஆசிரியர் என்னிடம் வந்து கூறினார். அதற்கு ஆசிரியர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். நான் இன்னும் வெற்றி பெறவில்லை நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. நான் தற்போது சிறிய பெண் எனது வேலை இன்னும் தொடக்கத்தில் தான் உள்ளது என்று கூறினார்.
ஆசிரியர்கள் என்னை பார்த்து மிகவும் உற்சாகம் அடைந்தார்கள் அவர்களது சிரிப்பை பார்த்து கொண்டே அடுத்த இயற்பியல் வகுப்பிற்க்கு சென்றேன் என்று மலாலா கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *