Breaking
Fri. May 17th, 2024

இஸ்லாமிய சமய நடவ­டிக்­கை­க­ளுக்­காக நாம் முரண்­ப­ட­வில்லை. இந்த நாட்டை இஸ்­லா­மிய மயப்­ப­டுத்தும் முயற்சிகளுக்காகவே நாம் போராடினோம். இப்போதும் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையின் உண்மையான மதம் பௌத்தம் மட்டுமே. அதை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. அந்த கடமையினையே நாம் செய்து வருகின்றோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார் . பெளத்த சிங்கள மக்களை பாது­காக்க தாம் புதிய அரசியல் பாதையினை உருவாக்கவுள்ளதாகவும், தனித்துவ சிங்கள தலைவராக உருவாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது பல சேனா பெளத்த அமைப்­பினால் கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார் . அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில் ,

இஸ்­லா­மிய முரண்­பாட்டு கோட்­பா­டொன்று பல­ம­டைந்த நிலையில் நாம் தான் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு துணை­யாக நின்றோம் . ஆனால் இன்று அர­சியல் சுய­ந­லத்­திற்­காக அவர் எங்­களை குற்­ற­வா­ளி­யாக்கி அதன் மூல­மாக மீண்டும் மக்­களை ஏமாற்ற முயற்­சிக்­கின்றார் . சிங்­கள மக்கள் மஹிந்த அர­சாங்­கத்தை முழு­மை­யாக நம்­பிய போதிலும் பல சந்­தர்ப்­பங்­களில் ஏமாற்­றப்­பட்­டனர் . ஆனால் தமக்­கான தலைவர் மஹிந்த என்ற இறுக்­க­மான நிலைப்­பாட்டில் அம்­மக்கள் இருந்­தனர். எனினும் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த அர­சாங்கம் தோல்­வி­ய­டைய அவரின் அவ­சர செயற்­பா­டு­களும் அவரை சுற்­றி­யி­ருந்த கூட்­ட­முமே காரணம் .

மீண்டும் மக்­களை ஏமாற்றி ஆட்­சியை கைப்­பற்ற திட்டம் தீட்­டு­கின்றார் . ஆனால் எமது அமைப்பு மக்­களை மட்­டுமே இலக்கு வைத்து செயற்­பட்­டதே தவிர அர­சி­யலை இலக்கு வைக்­க­வில்லை. எனினும் நாம் இப்­போது எமக்­கான புதிய பாதை­யினை ஆரம்­பித்­துள்ளோம்.

இத்­தனை கால­மாக பொது­பல சேனா அமைப்பு சிங்­கள கொள்­கை­யினை பலப்­ப­டுத்த என்ன செய்­ததோ அதே செயற்­பா­டு­களை விட்ட இடத்தில் இருந்து ஆரம்­பிக்­க­வுள்ளோம். எமக்­கான புதிய அர­சியல் பாதை­யினை ஆரம்­பித்து அத­னூ­டாக சிங்­கள பெளத்த மக்­க­ளுக்­கான தனித்­துவ தலை­மை­யினை ஆரம்­பிப்­பதே எமது நோக்­க­மாகும். அதற்­கான அனைத்து வேலைத்­திட்­டங்­க­ளையும் ஆரம்­பித்­துள்ளோம். நாம் யாரையும் ஆத­ரிக்­கவோ அல்­லது யாரு­டைய துணை­யு­டனும் பய­ணிக்க வேண்­டிய அவ­சியம் இல்லை .

இலங்­கையின் உண்­மை­யா­ன மதம் பௌத்தம் மட்­டுமே. அதை பாது­காக்க வேண்­டி­யது எம் ஒவ்­வொ­ரு­வ­ரதும் கடமை. அந்த கட­மை­யி­னையே நாம் செய்து வரு­கின்றோம் .

எனவே இப்­போது நாம் எடுத்­தி­ருக்கும் முடிவுகள் மிகவும் ஆரோக்கியமானது மட்டும் அல்லது சிங்கள பெளத்த மக்கள் எதிர்ப்பார்க்கும் முடிவும் இதுவே . அதேபோல் எமது புதிய பயணத்தில் தமிழ் ,முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொண்டு பயணிக்க நாம் தயார் . அதேபோல் எமது செயற்பாடுகள் யாருக்கும் கட்டுப்பட்டதல்ல , நாம் யாருக்கும் அடிபணிந்து செயற்படப் போவதும் இல்லை என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *