Breaking
Mon. May 20th, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

அம்பாறை மாவட்டத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது சாத்தியப்படவில்லை. அப்படியிருந்தும் நாம் எமக்கு வாக்களித்த மக்களை கௌரவப்படுத்தியுள்ளோமென அக்கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்ருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கிரைபைட் லங்கா பிறைவட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி மஜீத் தனது கடமைப் பொறுப்புக்களை நேற்று கையேற்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத் பதியுதீன் இங்கு மேலும் கூறியதாவது-

முஸ்லிம் அரசியல் வரலாற்றில் அம்பாறை மாவட்டத்தில் மூன்று நிறுவனங்களுக்கு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக எமது கட்சி இந்த பதவிகளை வழங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக எமக்கு ஒரு எம்பியையாவது பெற்றுத்தருமாறு நாம் விடுத்த வேண்டுகோள் கைகூடும் நிலையில் இருந்தபோதும் இறைவனின் நாட்டமோ, என்னமோ அது இறுதிநேரத்தில் கைநழுவிப்போனது. இதனால், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியொன்று அம்பாறை மாவட்டத்தில் சாரதியும் நானே நடத்துநரும் நானே என்று அறிக்கை விடுகின்றது எனினும், எமக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காதபோதும் அந்த மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை.

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை பெற்றுக்கொடுத்து வரும் பொத்துவில் பிரதேசத்தில் வாழும் மக்கள் இன்று படும் கஷ்டங்கள் ஏராளம் அங்கே ஒழுங்கான பாதையில்லை, குடிநீர் வசதியில்லை, மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, வேலையில்லா பிரச்சினை பெருமளவு காணப்படுகின்றது. இவற்றையெல்லாம் சீர்செய்வதற்கு பொத்துவில் மகனான எஸ்.எஸ்.பி.மஜீத் பாடுபடுவார் என நான் நினைக்கின்றேன். அந்த பிரதேச மக்களும் இதற்கு தமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும். என்னைப் பொறுத்தளவில் இந்த மக்களின் விமோசனத்திற்காக என்னால் முடிந்தவரை நான் உதவுவேன்.

இங்கு கிரைபைட் லங்கா நிறுவனத்தின் புதிய தலைவர் எஸ்.எஸ்.பி.மஜீத் உரையாற்றுகையில்
தனக்கு இந்த பதவியை வழங்கிய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்ததுடன் அமைச்சரின் பயணத்திற்கு தான் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சருக்கு பக்க பலமாக இருந்து செயற்படப்போவதாகவும் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் துடிதுடிப்பான நடவடிக்கைகளையும் அவரின் பண்புகளையும் பாராட்டிப் பேசினார்.

இந்நிகழ்வில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.ஜெமீல், உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எம்.அமீன், கிரைபைட் லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அலிகான் சரீப், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி யூசுப் கே மரைக்கார், சம்மாந்துறைப் பிரதேச சபை தவிசாளர் நௌசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

ssp-majeed

ssp-majeed.jpg2_

ssp-majeed.jpg2_.jpg3_.jpg4_

ssp-majeed.jpg2_.jpg3_

ssp-majeed.jpg2_.jpg3_.jpg4_.jpg5_

ssp-majeed.jpg2_.jpg3_.jpg411

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *