யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் பாது­காப்பு முழு­மை­யாக உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே எவ்­வித அச்­சமும் சந்­தே­க­மு மின்றி சுதந்­தி­ர­மாக கல்வி நட­வ­டிக்­கை­க ளில் ஈடு­ப­டு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கோரிக்கை விடுத்­துள்ளார்.

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்தர், விரி­வு­ரை­யா­ளர்கள் மற்றும் பெற்­றோர்கள் நேற்று பிற்­பகல் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அண்­மையில் யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இடம்­பெற்ற மோதல் சம்­பவம் மற்றும் மாண­வர்­களின் பாது­காப்­புக்­காக எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக இந்த சந்­திப்­பின்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இங்கு கருத்துத் தெரி­வித்த உப­வேந்தர் பேரா­சி­ரியை வசந்தி அர­ச­ரத்­தினம் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மீண்டும் எந்­த­வ­கை­யிலும் அண்­மையில் இடம்­பெற்­றது போன்ற துர­திஷ்­ட­வ­ச­மான நிகழ்­வுகள் ஏற்­ப­டாத வகையில் தேவை­யான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

இதே­வேளை மாண­வர்­களின் பாது­காப்­புக்­கான முழு­மை­யான பொறுப்பு அர­சாங்­கத்தை சாரும் எனத் தெரி­வித்த ஜனா­தி­பதி, எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அது­தொ­டர்­பாக கூடிய கரி­ச­னை­யுடன் செயற்­ப­டு­மாறு பொலிசார் உள்­ளிட்ட பாது­காப்புத் தரப்­பி­ன­ருக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

பல்­க­லைக்­க­ழ­கத்­தினுள் மாண­வர்­களின் பாது­காப்­புக்­காக மாண­வர்கள் மற்றும் விரி­வு­ரை­யா­ளர்­களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்­ப­தற்கும் இந்த சந்­திப்­பின்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

சந்திப்பில் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.