Breaking
Thu. May 2nd, 2024

யாழ்.கோண்­டாவிலில் புகை­யி­ர­தத்தின் முன் பாய்ந்து பாட­சாலை மாணவன் தற்­கொலை செய்­து­கொண்ட விவ­காரம் தொடர்பில் சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக
பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவண் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

18 வய­தான ராஜேஸ்­வரன் செந்­தூர ன்என்ற மாணவன் தற்­கொலை செய்­து­கொண்­டுள்ள நிலையில் அவ­ரது சட­லத்­துக்கு அருகே காணப்­பட்ட அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­திய கடிதம் தொடர்பில் விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் சுட்­டிக்­கட்­டினார்.

குறித்த அப்­பி­யாசக் கொப்­பியில் இருந்த அந்த கடி­த­மா­னது உண்­மையில் தற்­கொலை செய்ய முன்னர் அந்த மாண­வ­னி­னா­லேயே எழு­தப்­பட்­டதா? அல்­லது சம்­ப­வத்தின் பின்னர் எவ­ரேனும் அதனை அங்கு கொண்­டு­வந்து போட்­ட­னரா என்­பது குறித்து இதன் போது விஷே­ட­மாக அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சஞ்­சீவ ஜய­கொ­டியின் கீழ் விஷேட விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் இரு வேறு கோணங்களில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *