Breaking
Mon. May 20th, 2024
– நவ்பர் முஹம்மது –
கட்டாரில் வசிக்கும் நீங்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம் இன்று ( 28/10/2015)) நாட்டின் கௌரவ அமீர் தமீம் பின் ஹமத் அல தானி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சில விபரங்களை இன்றைய “அல் வதன்” பத்திரிகையில் இருந்து அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.1.கபாலத் முறை நீக்கப்பட்டு தொழில் வழங்குனர், தொழில் பெறுனர் என்ற முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது.
2. குறூஜ் எனும் வெளிநாட்டு தொழில் பெறுனர்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல வழங்கப்பட வேண்டிய பயன அணுமதி ரத்து செய்யப்படுள்ளது. இத‌ற்கென்று ஒரு தனியான நிர்வாகப் பிரிவு ஏற்படு செய்யப் பட்டு அதனூடாக பயன அணுமதிகளை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். அங்கு தக்க காரனங்களுக்காக அணுமதி மறுக்கப்பட்டால் அதை முறையிடுவதற்கு என்று வேறு குழு அமைக்கப்பட்டுள்ளது.
3. ஆறு மாத காலத்திற்கு மேல் கட்டார் நாட்டிற்கு வேளியே தங்கிருந்து மீண்டும் கட்டார் வர விரும்புபவர்கள் விஷேட அணுமதி பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.4. இந்த அடிப்படையில் குடும்பதிற்கான விஸா பெறும் முறையிலும் மாற்றங்கல் சில ஏற்பட்டுள்ளன.5.தொழில் ஒப்பந்ததின் குறைந்தளவு காலம் இரண்டு வருடங்களாகும். அது முடிந்ததும் யாருடைய அணுமதியும் அவசியம் இன்றி இன்னொரு தொழில் வழங்கினரிடம் வேலை தேடிக் கொள்ளலாம். ஒப்பந்தம் ஐந்து வருட காலத்திற்கு அதிகமாக இருந்தால் ஐந்து வருடம் முடிந்ததும் வேறு இடங்களில் வேலை தேடிக் கொல்ளலாம்.

6. ஏதாவது தொழிலில் செய்த குழறுபடிகளுக்காக வேலை நீக்கம் செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர் குறைந்தது நான்கு வருடங்களுக்கு கட்டார் நாட்டிற்குள் மீண்டும் பிரவேசிக்க முடியாது. கடுங்குற்றங்கள் புரிந்து நீதி மன்ற தீர்புகள் மூலம் வெளியேற்றப்பட்டவர் அமைச்சக அணுமதி பெற்றே கட்டார் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும்.

சுமார் ஐம்பது ஷரத்துகளுடைய புதிய சட்டக் கோர்வை பற்றி இப்போதைக்கு இவ்வளவு விபரங்கள் தான்.. பிறகு தேவை எனக் கருதினால் மேலதிக விபரங்களைத் தருகிறேன்..

இன்ஷா அல்லாஹ்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *