Breaking
Mon. May 20th, 2024

அமைதிக்கான நோபல் விருது வென்ற ஆங் சான் சுகியி தலைமையிலான மியன்மாரின் பிரதான எதிர்க்கட்சி வரும் நம்பரில் நடைபெறும் பொதுத் தேர்தலில் திட்டமிட்டு முஸ்லிம் வேட்பாளர்களை புறக்கணித்திருப்பதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சுகியி தனது ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியில் முஸ்லிம்களை தவிர்க்குமாறு அறிவுருத்தி இருப்ப தாக அந்த சிரேஷ்ட உறுப்பினர், பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். மியன்மாரில் கடு ம்போக்கு பௌத்த தேசியவாதிக ளின் முஸ்லிம் எதிர்ப்பு கருத்துகள் வலுவடைந்திருக்கும் நிலையிலேயே அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தேசிய மற்றும் பிராந்திய தேர்தல்களில் போட்டியிடும் 1,151 வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம் கூட இடம்பிடிக்கவில்லை. எனினும் மிய ன்மாரில் சுமார் ஐந்து மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதோடு அது நாட்டு மக்கள் தொகையில் 4 முதல் 10 வீதமாகும்.

மியன்மாரின் இராணுவ ஆதரவு பெற்ற ஒற்றுமை மற்றும் அபிவிருத்திக்கான அரச கூட்ட ணியிலும் முஸ்லிம் வேட்பாளர் எவரும் வரும் தேர் தலில் போட்டியிடுவதில்லை. எனினும் வரும் நவம்பர் 8ஆம் திகதி தேர்தல் மியன்மாரில் 25 ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலாக அமைய விருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம் உள்ளுர் தேர்தல் ஆணையமும் பல டஜன் முஸ்லிம் வேட்பாளர்களை அவர்களது பிரஜh உரிமை பற்றி கேள்வி எழுப்பி தகுதி இழக்கச் செய்துள்ளது. “சுகியி மாபாதா மீதான பயம் கார ணமாகவே முஸ்லிம்களுக்கு இடம ளிக்க மறுக்கிறது” என்று அந்த கட்சி வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

கடும்போக்கு பௌத்த அமைப் பான மாபாதா, இனம் மற்றும் மத த்தை பாதுகாக்கும் அமைப்பாக குறிப்பிடுகிறது. முஸ்லிம்களை கடு மையாக தாக்கும் இந்த அமைப்பு நாட்டின் செல்வாக்கு மிக்க குழு வாக மாறி வருகிறது.

70 வயதான சுகியி தனது அகி ம்சை வழியிலான ஜனநாயக போரா ட்டத்திற்காக 1991ஆம் ஆண்டு அமை திக்கான நோபல் விருதை வென்ற வராவார். மியன்மாரில் ரொஹிங்கியா முஸ்லிம்கள் உட்பட பொதுவாக முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெ றும் வன்முறை மற்றும் பாகுபாடு கள் தொடர்பில் அவர் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *