Breaking
Mon. May 20th, 2024

ஜப்­பானின் கீழ்­மட்ட மனித பாது­காப்புத் திட்­டத்­திற்­கான நன்­கொடை உதவி வழங்கும் பொருட்டு வட­ப­கு­தியில் கண்­ணி­வெடி அகற்றும் வேலைத்­திட்­டத்­திற்கு ஜப்பான் அரசு 801,311 அமெ­ரிக்க டொலர்­களை (108 மில்­லியன் ரூபா) வழங்­கி­யுள்­ளது.

நன்­கொடை ஒப்­பந்தம் ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுக­நும மற்றும் HALO Trust நிறு­வ­னத்தின் திட்ட முகா­மை­யாளர் டமியன் ஒபிரைன் ஆகிய இரு­வரும் கொழும்­பி­லுள்ள ஜப்­பா­னிய தூது­வ­ரா­ல­யத்தில் நேற்று கைச்­சாத்­திட்­டனர். இலங்­கையின் வட­ப­கு­தியில் கண்­ணி­வெடி அகற்றும் திட்டம் HALO Trust நிறு­வ­னத்தால் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. கண்­ணி­வெ­டியால் பாதிப்­ப­டைந்த பிர­தே­சங்­களை பாது­காப்­பான பிர­தே­ச­மாக மாற்றி மக்­களை தங்­க­ளது வாழ்­வா­தா­ரத்தை தொடர்­வ­தற்­கான இலங்கை அரசின் முயற்­சியை மேற்­கு­றித்த நிறு­வனம் துரி­தப்­ப­டுத்­து­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்த மக்­களை மீளக்­கு­டி­ய­மர்த்தல் மற்றும் அவ்­வாறு திரும்­பி­ய­வர்­களின் விவ­சாயம் மற்றும் வேறு வாழ்­வா­தார நட­வ­டிக்­கை­களை மீள ஆரம்­பித்தல் போன்­ற­வற்றை துரி­தப்­ப­டுத்தும் பொருட்டு இலங்­கையில் கண்­ணி­வெடி அகற்றும் திட்­டத்­திற்கு உதவும் முக்­கிய நன்­கொடை வழங்­கு­ன­ராக ஜப்பான் திகழ்­கி­றது.

தனது நன்­கொடை உதவி வழங்கும் திட்­டத்தின் கீழ் ஜப்பான் அரசு இலங்­கையின் வட கிழக்கு பிர­தே­சங்­களில் கண்­ணி­வெ­டி­களை அகற்­று­வ­தற்­காக 2003ஆம் ஆண்­டி­லி­ருந்து 27.7 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை வழங்­கி­யுள்­ளது.

2003ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்­கையில் கண்­ணி­வெடி அகற்றும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு மிக முக்­கிய நன்­கொ­டை­யா­ள­ராகத் திகழும் ஜப்பான் அரசு HALO Trust நிறு­வ­னத்தை மிக நம்­பிக்கை வாய்ந்த நிறு­வ­ன­மாக அங்­கீ­க­ரித்­துள்­ளது என அந் நிறு­வ­னத்தின் திட்ட முகா­மை­யாளர் டமியன் ஓபிரைன் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்­கையின் இலக்கு 2020ஆம் ஆண்­ட­ளவில் இலங்கை கண்­ணி­வெடி தாக்­க­மற்ற நாடாக விளங்க­ வேண்­டு­மென்­பதே இந்த நிதி­யு­த­வியின் நோக்கம் என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. இவ் இலக்கை அடைவதற்கு ஜப்பான் ஏற்கனவே முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. எனினும் நீண்டகால நன்கொடை யாளர்கள் மற்றும் புதிய பங்குதாரர்களால் வழங்கப் படும் மேலதிக நிதியுதவி போன்றவற்றிலும் இது தங்கி யுள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *