Breaking
Mon. May 20th, 2024

சிறு­பான்மை இன மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ளும் அடித்­த­ளத்தை இழந்­ததன் கார­ண­மா­கவே ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தேர்­தலில் தோல்­வியைத் தழு­வி­யது எனத் தெரி­வித்­துள்ள அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன, அடுத்த பொதுத் தேர்­தலில் சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான முன்­ன­ணியை வெற்­றி­பெறச் செய்­வ­தற்­கான சீர­மைப்­புக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

இரத்­தி­ன­பு­ரியில் அண்­மையில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் உரை­யாற்­றும்­போதே அமைச்சர் ஜோன் சென வி­ரட்ன இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப ­தா­வது,

தேசிய அர­சாங்­கத்தில் நிபந்­த­னை­க­ளு­ட­னேயே இணைந்­துள்ளோம். எமது கட்­சியை பாது­காத்துக் கொண்டு மக்­க­ளுக்­கான சேவையை முன்­னெ­டுப்­பதே அதன் முக்­கிய நோக்­க­மாகும். ஐந்து வரு­டங்கள் எதிர்க்கட்­சி­யி­லி­ருந்து கொண்டு வெறு­ம­னமே “எதிர்ப்பு சுலோ­கங்­களை” வெளி­யிட்டுக் கொண்­டி­ருப்­பதை விட அமைச்சுப் பத­வியை பெற்றுக் கொண்டு எமது மக்­க­ளுக்­கான தேவை­களை நிறை­வேற்ற வேண்டும். அதுவே எம்முன் உள்ள கடப்­பா­டாகும்.

இவ்­வாறு எமது நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுப்­ப­தோடு, இந்த இரண்டு வரு­டங்­க­ளுக்குள் எமது கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்தி அடுத்த பொதுத் தேர்­தலில் சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான முன்­ன­ணியை வெற்றி பெறச் செய்­வதே எமது இலக்­காகும். இதன்­போது சிறு கட்­சி­க­ளையும் எம்முடன் இணைத்துக் கொள்வோம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவு படுத்த அல்லது அழிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஒருபோதும் துணை போகமாட்டார் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *