Breaking
Mon. Apr 29th, 2024

ஸூரத்துஜ் ஜுமர் 39 (கூட்டங்கள்)

கடந்த ஞாயிறு இரவு வேலை முடிந்து வீடு நோக்கிச் செல்லும் வேளையில் பசி வயிற்றைக் கிள்ளியது.

தங்குமிடத்தை அண்மிக்கும் வேளையில் வண்டியிலிருந்து இறங்கி வீதியின் ஓரமாக இருந்த கப்டேரியாவில் உழுந்து வடையும், தேனீரும் அருந்தி விட்டு வெளியேறும் வேளையில் இஷாஹ் தொழுகைக்கான அதான் ஒலித்தது பக்கத்திலிருந்த கெபின் சிறிய பள்ளிவாயலில் தொழுது விட்டுச் செல்லலாம் என எண்ணி பள்ளிவாயலுக்குள் நுழைந்தேன்.

ரமளானில் ஒவ்வொரு நாளும் குர் ஆனின் ஒரு சிறிய பகுதியை ஓதி வந்தேன். ரமளானுக்கு பின்னர் சில நாட்கள் என்னால் ஓத முடியாமல் போனது.

தொழுகைக்காக இகாமத்து சொல்வதற்கு நேரம் இருப்பதால் குர் ஆனை கடைசியாக ஓதிய இடத்திலிருந்து ஓதலாம் என எண்ணினேன்.
சூறத்துல் சுமரின் (39 வது அத்தியாயம்) நடுப் பகுதியிலிந்து சுமார் பத்து நிமிடங்கள் ஓதினேன்.
அவ் வேளையில் தொழுகைக்கான இகாமத் ஒலித்தது அதற்குள் கடைசி ஓரிரு வசனங்களையும் ஓதி முடிக்கலாம் என எத்தனித்தேன் முடியவில்லை தொழுகை ஆரம்பித்து விட்டது.

இமாம் முதலாவது ரக்காத்தில் ஓதிய வசனத்தில் ஜுமர் என்ற சொல் என் காதில் கேட்டது உடன் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் இது ஸூரத்துஜ் ஜுமருடைய வசனங்களாகத்தான் இருக்க வேண்டுமென்று.

தொழுகை முடிந்ததும் குர் ஆனை எடுத்து சூரா சுமரின் இறுதி வசனங்களில் எனது பார்வையை செலுத்தினேன் என்ன ஆச்சரியம் சுபஹானல்லாஹ் இமாம் ஓதியது ஸூரத்துஜ் ஜுமறின் கடைசி வசனங்கள் என அறிந்தேன்.

இது என்னை மிகவும் பிரமிக்க வைத்தது அல்ஹம்துலில்லாஹ்.

அந்த குர் ஆன் வசனம்…

وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا
எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங் கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; (39:73)

எம்.வை.இர்பான் தோஹா கத்தார்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *