Breaking
Mon. Apr 29th, 2024

புறக்கோட்டை, பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் நிலை­யத்­தி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட யாழ்.வட்­டுக்­கோட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த கார்த்­திகா என்ற 34 வய­து­டைய பெண்ணின் மர்ம மரணம் குறித்து நேற்று வரை எவரும் கைது செய்­யப்­ப­டவில்லை. இந்நிலையில் அப்­பெண்ணின் இர­க­சிய காத­லனை கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் (சீ.சீ.டி) தேடி வரு­கின்­றனர்.

குறித்த பெண்­ணுடன் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக ஒன்­றாக இருந்­த­தாக கூறப்­படும் யாழ்.பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரையே பொலிஸார் இவ்­வாறு தேடு­வ­தா­கவும், அவர் குறித்த பெண்ணை கொலை செய்­தி­ருப்­ப­தாக நம்­பு­வ­தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

அவரே புறக் கோட்டை பஸ் நிலை­யத்­துக்கு குறித்த பொதியை கொன்­டு­வந்து வைத்­துள்­ளமை தொடர்­பிலும் ஆதா­ரங்கள் கிடைத்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களின் படி, கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­படும் கார்த்­திகா, கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது இர­க­சிய காதலன் கிருஷ்ண சதீ­ஷுடன் கொழும்­புக்கு வந்து வசித்து வந்­துள்ளார்.

வத்­தளை பிர­தே­சத்தில் வாடகை வீடொன்றில் இவர்கள் வசித்து வந்­துள்ள நிலை­யி­லேயே கடந்த ஜூலை 22 ஆம் திகதி அவ்­வி­ரு­வரும் செட்­டியார் தெருவில் உள்ள விடுதி ஒன்றில் வசிக்க வந்­துள்­ளனர். இதன் போது கேஸ் அடுப்பு, அரிசி, ஏனைய வீட்டு பல­ச­ரக்கு பொருட்­க­ளையும் அவர்கள் கொண்­டு­வந்­துள்­ள­துடன் ஒரு நாளைக்கு 700 ரூபா வாட­கையின் அடிப்­ப­டை­யி­லேயே அங்கு தங்­கி­யுள்­ளனர்.

கார்த்­தி­காவின் பெய­ரி­லேயே அறை வாட­கைக்கு பெறப்­பட்­டுள்­ள­துடன் கிருஷ்ண சதீஷ் தன்­னிடம் அடை­யாள அட்டை இல்லை என குறிப்­பிட்­டுள்ளார். எவ்­வா­றா­யினும் இவர்கள் தங்­கி­யி­ருந்த குறித்த லொஜ்ஜின் அறை­ய­ானது குற்­றத்­த­டுப்புப்ஜ பிரிவு பொலி­ஸா­ரினால் கடுமையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் சில தட­யங்­களும் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை வரை சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர் கைது செய்­யப்­ப­டாத நிலையில் குற்றத் தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசிங்கவின் ஆலோசனைக்கு அமைய அதன் பொறுப்பதிகாரி பிரதன பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *