Breaking
Fri. May 17th, 2024

கல்வியின் மூலமே சிறந்த சமூகத்தை நாம் உருவாக்கமுடியும் என்று வாகரை பால்சேனை கலை மகள் வித்தியாலயத்தில் பன்னையாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி  குறிப்பிட்டார்.

இந் நிகழ்வு மில்கோ நிறுவனத்தை பிராந்திய முகாமையாளர் க கனகராஜா தலைமையில் இடம்பெற்றது

தொடர்ந்தும் உரையாற்றுகையில். ..

உழைக்கும் மக்கள் என்றும் மேன்மையானவர்கள் அவர்களின் உழைப்பு இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு என்றும் துணையாக இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலே கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எனது கனவாகும்.எதிர்காலத்திலே இந்த பிரதேசத்திலே இருக்கின்ற உங்களுடைய பிள்ளைகள் வைத்தியராக,பொறிளியளாளராக,சட்டத்தரணியாக,ஆசிரியராக வந்து சேவைகளை செய்ய வேண்டும். அதற்காக என்னால் முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்கி உங்களது வாழ்க்கை தரத்தையும்,கல்வியையும் அபிவிருத்தி அடைய செய்வேன் என இந்த இடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்
மில்கோ நிறுவனமானது பால் பண்ணையாளர்களின் தோழனாக இலங்கையிலே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
அவர்கள் உங்களது பிள்ளைகளின் கல்விக்காக எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்களுக்காக பாராட்டினை தெரிவித்துக் கொள்கின்றேன்.மில்கோ நிறுவனம் எதிர்காலத்திலே பால் பண்ணையாளர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பல செயற்திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றது.அதன் மூலம் நீங்கள் அதிக இலாபங்களை உழைக்க முடியும்.பல கனவுகளோடு
முதலாம் தரத்திற்க்கு காலடி எடுத்து வைக்கும் இந்த பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு சுபீட்சமாகவும் அவர்கள் சிறந்த கல்விமான்களாகவும் வர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.என கூறினார்.

எதிர்காலத்தில் இந்த பிரதேசம் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக என்னுடன் இணைந்து செயலாற்றும் மில்கோ நிறுவனத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிகழ்வில் அமரசிங்க WD , சந்தைப்படுத்தல் முகாமையாளர் அம்பாறை மகேஷ் நிஷாந்த , பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரி சோமரட்னம் , கிராம சேவையாளர் புஷ்பராஜா மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு கலந்து சிறப்பிந்திருந்தனர்.

15740775_1318331424895213_3261591479034109559_n 15826070_1318331511561871_3751263957616899411_n 15823449_1318331734895182_3284608819597654243_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *