Breaking
Sun. May 12th, 2024
 -அனஸ் அப்பாஸ்-

யாருக்காகவும் காத்திருக்காமல் நேரமும் உலகும் மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது , நேரத்துடனும் உலக மாற்றங்களுடனும் நாம் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறப் பார்க்கின்றோம்.

                           ஆனால் ஒரு பெரும் நோய் எம்மில் வந்து விடும் போது மனச்சோர்வும் குடும்ப சுமையும் சேர்ந்து கொள்ள, ஓட்டத்தின் வேகத்திலிருந்து  தள்ளி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இருப்பினும் இப்படியான நிலையிலும் தைரியத்துடன் சிரித்துப் பேசுபவர்கள் சிலரே.
              அப்படியான ஒருவரை நேற்று பெரியதோடம் மூன்றாம் ஒழுங்கையில் அவரின் விட்டில் வைத்து சந்தித்தோம். பெரியதோடத்தை சேர்ந்த ஸரூக்கா என்பவரின் மகனான அபூபக்கர் முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் என்பவரே அவர்.
             36 வயதாகும் ஹிதாயத்துல்லாஹ்விட்கு மூன்றே வயதில்  ஒரு குட்டி மகன் உள்ளார் . வெளிநாட்டில் சரதியாக பணிபுரிந்த இவர் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர்திரும்பினார். எனவே, மிக அவசரமாக இவருக்கு ஓபன் ஹார்ட் சேர்ஜரி (Open Heart Surgery) எனப்படும் திறந்த இதய சத்திர சிகிச்சை செய்யப்பட வேண்டும் என வைத்தியர்கள் கோரியுள்ளனர், இருதய நோய் காரணமாக தற்போது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இவர் உள்ளார்.
              எதிர்வரும் மே 7 ம் திகதி அந்த சிகிச்சைக்காய் ஹிதாயதுல்லாஹ்வை LANKA HOSPITALS இல் அனுமதிக்க வேண்டிய நிலையில் அவரது குடும்பத்தினர் உள்ளனர், இருப்பினும் அந்த ஓபன் ஹார்ட் செர்ஜெரி காக குறைந்த பட்சம் ஆறு லட்சங்களாவது செலவாகும் என வைத்தியர்கள் கணிப்பிட்டுள்ளனர் ,
             பலஹத்துரை பெரியபள்ளிவாசல் அனுமதிக் கடிதத்தோடு ஊர் மக்களிடம் நிதி உதவியை நாடி நிற்கும் இவரை எமது “முன்னோடி” ஊடகக் குழுவின் உதவும் கரங்கள் மூலமாக உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறோம்,
             நிதி உதவி வழங்க முடியாத நிலையிலுள்ள சகோதரர்கள் இவரின் நிலையை மற்றவர்களுக்கு எத்தி வைப்பதினூடாக இவருக்கு உதவலாம் என்பதையும் இங்கு நினைவு கூறிக்கொள்கிறோம் .
BANK         :- COMMERCIAL BANK -Kochchikade-
A/C NAME :- A.M IDAYATHULLA
A/C NO       :- 874-001-9013
            
தொடர்புகளுக்கு :- 
077 1164481 -ஹிதாயத்துல்லாஹ்
077 7432927 -முசம்மில்
078 5048278 -சில்மி
உங்களின் உதவிகள் அவருக்கு கிடைக்கப்பெற்று அவர் பூரண குணமடையும் வரை இப்பொழுது போலவே எப்பொழுதும் அவரது தைரியத்தை பலப்படுத்து றஹ்மானே என அல்லாஹ்விடம் பிராத்தித்தவர்களாக ஹிதயதுல்லாஹ்விடம் இருந்து விடைபெற்றோம் .

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *