Breaking
Mon. May 20th, 2024
அவுஸ்திரேலியா
சட்டவிரோத குடியேற்றத்தற்கு எதிராக இலங்கை மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலிய அரசு பாராட்டியுள்ளது.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி தலைமையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அரசின் சர்வதேச மற்றும் வர்த்தக அலுவல்கள் திணைக்களத்தின் குடியகல்வு தொடர்பான உயர்ஸ்தானிகர்  எண்ட்ரூ கொலோன்சின்விஸ்கி உட்பட அதிகாரிகள் நீதிமன்ற அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை சந்தித்தபோதே இப்பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தை திருத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன்  இதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் மனித வியாபாரம் தொடர்பில் இடம்பெறும் குற்றங்களை தடுக்க நீதிமன்ற அமைச்சின் தலைமையில் பொலிஸ்- முப்படையினர்- பாதுகாப்புப் படையினர்- வெளிவிவகார அமைச்சு- வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு- மகளிர் விவகார அமைச்சு- சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சு- மக்கள் சமாதான அனர்த்த முகாமைத்துவ மற்றும் சிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சு- சமூக சேவைகள் அமைச்சு- நீதியரசர் திணைக்களம்- மனித உரிமை ஆணைக்குழு மற்றும் சீர்த்திருத்த மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்கள்  இணைந்து மனித வியாபாரத்தை தடுக்க சட்ட நடவடிக்கை எடுத்துள்ளன.
இக்குற்றங்களில் சிக்கும்  – அகப்படுபவர்களுக்கு உதவி செய்பவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடர்பிலும் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளிடம் அமைச்சர்  விளக்கமளித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *