Breaking
Mon. May 20th, 2024

– எம்.எப்.எம்.பஸீர் –

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இளைய சகோ­த­ர­ரான ‘வெலி ராஜு’ என பர­வ­லாக அறி­யப்­படும் பிரி­யந்த சிறி­சேன மீது சர­மா­ரி­யான கோடரி தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்த தாக்குதல் நேற்று இரவு 7.00 மணி­ய­ளவில் பொலன்­ன­றுவை, புதிய நகர பிர­தே­சத்தின் ஹத்­தரே எல பகு­தியில் உள்ள வாகனம் திருத்தும் இட­மொன்றின் அருகே வைத்து மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

பிரி­யந்த சிறி­சே­னவின் நண்­ப­ரான 34 வய­து­டைய ஹப்­பு­தந்­தி­ரிகே துஷான் லக்மால் என்­ப­வரால் இந்த தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் தாக்­கு­தலில் பிரி­யந்த சிரி­சே­னவின் தலையின் பின் பகுதி கடுங் காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் தாக்­கு­த­லை­ய­டுத்து பிர­தே­சத்தை விட்டு தப்பிச் சென்ற குறித்த சந்­தேக நபர் பின்னர் இரவு 9.00 மணி­யாகும் போது பக­மூன பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்­துள்­ள­தா­கவும் சமப்வம் குறித்து பொலன்­ன­றுவை உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர மேலும் குறிப்­பிட்டார்.

சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நேற்று இரவு 7.00 மணி­ய­ளவில் ஜனா­தி­ப­தியின் சகோ­த­ர­ரான வெலி ராஜு எனப்­படும் பிரி­யந்த சிறி­சேன பொலன்­ன­றுவை புதிய நகரப் பகு­தியின் ஹத்­தரே எல எனும் இடத்தில் வாகன திருத்தும் இடம் ஒன்றின் அருகே தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்ளார். அவ­ரது நண்­ப­ரான லக்மால் என்­பவர் இந்த தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த தாக்­கு­த­லை­ய­டுத்து உட­ன­டி­யாக பொலன்­ன­றுவை போதனா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்ள பிரி­யந்த சிறி­சேன அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இத­னி­டையே ஸ்தலம் விரைந்த விஷேட பொலிஸ் குழு­வினர் சம்­பவம் இடம்­பெற்ற பிர­தே­சத்தை குற்றப் பிர­தே­ச­மாக பிர­க­டனம் செய்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். பொலிஸார் மேற்­கொண்ட ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் பிரி­யந்த சிறி­சே­னவின் நண்­ப­ரான லக்மால் தாக்­கு­தலை மேற்­கொள்ளும் போது அருகே லக்­மாலின் இரு உற­வி­னர்கள் இருந்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ள­துடன் லக்மால் பிர­தே­சத்தை விட்டு தப்பிச் சென்­றுள்­ள­தையும் உறு­திப்­ப­டுத்­தினர். அத்­துடன் லக்­மாலும் பிரி­யந்த சிறி­சே­னவும் நண்­பர்கள் என்­ப­தையும் வெளிப்­ப­டுத்திக் கொண்ட பொலிஸார் லக்­மாலின் வீட்­டுக்கு அரு­கி­லேயே தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ள­தையும் உறு­திப்­ப­டுத்­திக்­கொண்­டனர்.

இத­னை­ய­டுத்து இந்த தாக்­கு­த­லுக்­கான கார­ணத்தை பொலிஸார் தேடினர். அதில் நண்­பர்கள் இரு­வ­ருக்கும் இடை­யி­லான தனிப்­பட்ட விவ­காரம் ஒன்று இந்த தாக்­கு­த­லுக்கு பிர­தான கார­ண­மாக அமைந்­துள்­ளதை பொலிஸார் வெளிப்­ப­டுத்திக் கொன்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு குறிப்­பிட்டார்.

இந் நிலையில் நேற்று இரவு 9.00 மணி­யாகும் போது பொலன்­ன­ருவை மாவட்­டத்தின் பக்­க­மூன பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்­றுள்ள லக்மால் தானே பிரி­யந்த சிறி­சே­னவை தாக்கி படு­காயம் ஏற்­ப­டுத்­தி­ய­தாக கூரி சர­ண­டந்­துள்ளார். இத­னை­ய­டுத்து அவரை கைது செய்த பொலிஸார் அவ­ரிடம் விஷேட விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர்.

இந் நிலையில் பொலன்­ன­றுவை வைத்­தி­ய­சா­லியில் அனு­ம­திக்­கப்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இளைய சகோ­தரர் பிரி­யந்த சிறி­சே­னவின் மோச­மாக காணப்­ப­டவே நேற்று இர­வோ­டி­ர­வாக பொலன்­ன­று­வையில் இருந்து விஷேட ஹெலிகொப்டர் ஊடாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பாட்டார்.

இந் நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பிரியந்த சிறிசேனவுக்கான சிகிச்சைகள் நேற்று இரவு ஆரம்பிக்கப்பட்டன.
இந் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் பொலன்னறுவை உதவி பொலிஸ் அத்தியட்சரின் கீழான விஷேட பொலிஸ் குழு விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *