Breaking
Wed. May 8th, 2024

பாறுக் ஷிஹான்


சவூதி அரசாங்கத்தினால் நோன்பு காலத்திற்கென வழங்கப்பட்டுள்ள பேரிச்சம்பழங்கள்  பெறுவதற்கு யாழ் முஸ்லீம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழ் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து பள்ளிவாசல் எல்லைக்குட்பட்ட மக்களிற்கு மேற்குறித்த பேரிச்சம்பழங்களை பெறுவதற்கு என்றுமில்லாதவாறு குடும்பவிபரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தை வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் கடிதம் மூலமாக கேட்டுள்ளார்.
அத்துடன் குடும்ப விபரங்கள் அவசியமாகவுள்ளதுடன் இதன்படி குடும்ப தலைவர்.தலைவி பெயர்,அடையாள அட்டை.முகவரி ,குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை என்பன அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ்விபரங்கள் அனைத்தும் எழுத்து மூலம் பள்ளிவாசலின் கடிதத் தலைப்பில் உறுதிப்படுத்தி எதிர்வரும் 14ஆம் திகதி  தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.
அத்துடன் இவ்விபரங்கள் திரட்டப்படுவதன் நோக்கம் பள்ளிவாசல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வதிவோரின் விபரங்களை அறியவும் ,இரட்டைப்பதிவுகள் உள்ளவர்களை இனங்கண்டு நீக்குவதுமாகும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வியடங்கள் அனைத்தும் வட மாகாண சபை  உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் பெயரை உள்ளடக்கிய கடிதத்தலைப்புடன் அனைத்து பள்ளிவாசல்களிற்கும் அவரது பிரத்தியேக செயலாளர் என்.அப்துல்லாஹ்வினால் தங்களிடம் வழங்கப்பட்டதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
 கடந்த காலத்திலும் இப்பேரிச்சம்பழங்கள்  இதே போன்று நிபந்தனைகள் போடப்பட்டு நோன்பு காலத்தில் பொதுமக்களிற்கு கிடைக்காது மிஞ்சிய நிலையில் பெருநாள் தினத்தன்று வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
. ஏற்கனவே   தங்களிற்கு  பள்ளிவாசல் எல்லைக்குட்பட்ட மக்கள்  யார் யார் உள்ளனர் என்பது தெரிந்த விடயமே என்றதுடன் வீணாக மக்களிடம் விபரங்களை பெற்று அவர்களை அலைக்கழிக்க விரும்பவில்லை என பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறியதுடன் எதுவித அரசியல் தலையீடுமற்ற பொதுஅமைப்பிடம் இவ்விடயம் பாரப்படுத்தப்படுத்த வேண்டும் என அங்கு இருக்கும் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரசினால் தங்களிற்கு இலவசமாக கிடைக்கவேண்டிய பேரிச்சம்பழங்கள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி கிடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
மாகாண  சபை உறுப்பினர் தனது விளம்பரத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழிநடத்தலில் முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு தன்னிடம் இவ்விரு மாவட்டத்திற்கும் பகிர்ந்தளிக்குமாறு கேட்டுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக மேலும்  அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே எவ்வித அரசியல் தலையீடும் இன்றி உரிய காலத்தில்  இப்பழங்களை பெற பொதுவான குழு ஒன்றினை நியமித்து பகிர்ந்தளிக்க முன்வருமாறு முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சினை கேட்டுள்ளனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *