Breaking
Fri. May 17th, 2024
– ஏ.எஸ்.எம்.ஜாவித் –

சிறந்த சமயத் தலைவர் சோபித தேரரர் காலமானார். இலங்கை மக்களுக்கு பாரிய இழப்பு

இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முன்னின்றவர்களில் முக்கியமானவராக கருதப்பட்ட மாதுருவாவே சோபித தேரர் இன்று (08) காலமானார்.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் இன்று அதிகாலையில் சிங்கப்பூர் வைத்திய சாலையில் இறையடி சேர்ந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல காலமாக  இலங்கையில் சர்வாதிகார ஆட்சி முழ நாட்டு மக்களையும் அதாளபதாளத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருந்த நிலையில் அதில் கவலை கொண்டிருந்த ஒரு சமயத் தலைவராக காணப்பட்ட மாதுருவாவே சோபித தேரரைக்க குறிப்பிடலாம். இலங்கையின் ஆட்சி முறையை மாற்றி ஒரு புது யுகத்தை ஏற்படுத்தி இன்று மக்கள் மத்தியில் சந்தோசத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்திய தேரர் அவர்களின் இழப்பு இந்த நாட்டில் சமாதானத்தையும், அமைதியையும் விரும் அனைத்து மக்களுக்கும் பாரியதொரு இழப்பாகவே நோக்கப்படுகின்றது.

இனவாத செயற்பாடுகளால் பாதிக்கபட்டு இருந்த இந்த மக்களை அதிலிருந்து  காக்கும் நோக்குடன் தனது உயிரையும் துச்செமெனக் கருதி மிகவும் துணிச்சலுடன் தனது அறிவு ஞானத்தைக் கொண்டு மிகவும் கட்சிதமாக மேற்கொண்ட ஒரு பாரிய பங்களிப்பின் பயனாகவே இன்று இலங்கை வாழ் மக்கள் இந்த தேசிய நல்லிணக்க அரசில் அமைதியான சுவாசக் காற்றை அனுபவிக்கின்றார்கள் என்றால் அதனை யாராலும் மறந்து விட முடியாத.

இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் தத்தமது சமய விழுமியங்களுடனும,; ஜனநாயக பண்புகளுடனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்புடன் மதித்து வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சிறந்த மதத்தலைவர் என்றால் அது மிகையாகது. எனவே இவரின் பணியை முன் உதாரணமாக் கொண்டு சகல சமய மக்களினதும் மதத்த தலைவர்கள் சோபித தேரருடைய நல்ல குணாம்சங்களை கொண்டவர்களாக செயற்பட வேண்டிய காலம் சோபித தேரரின் மறைவு சகலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் மிகவும் அச்சத்துடன் தமது வாழ்வை நடாத்திக் கொண்டிருந்த சிறுபான்மை மக்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் மீண்டும் துணிச்சலுடன் தமது சமய விழுமியங்களுடன் வாழ்வதற்கும், தற்போது சிறைகளிலே வாழும் தமிழ் கைதிகள் விடுதலை பெறுவதற்கும் அவர்களின் நிரந்தர விடுதலைக்காக தமது கருத்துக்களை துணிச்சலுடன் தெரிவிப்பதற்குமான ஒரு அரசியல் கலாச்சாரத்தை தோற்று வித்து அவர்களின் விடுதலையின் ஒரு பங்காளியாகவும் இவரின் சேவை இன்று நினைவு கூறப்படுகின்றது.

எனவே இனவாதமும், மதவாதமும் தலைக்குமேல் போய்க் கொண்டிருந்த இக்காலத்தில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மற்றவர்களை பழிவாங்கும் நிலைமைகளை முற்றுப்பெற வைத்த மறைந்த சமயத் தலைவர் சோபித தேரின் மறைவு இந்த நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் ஈடு கொடுக்க முடியாத பாரிதொரு இழப்பாக இருப்பதோட இவர்போன்ற சிறந்த மற்றொரு தலைமுறை கொண்ட சமயத் தலைவர்களின் அவசியமும், அவசரமும் இவரின் இழப்பு தோற்று வித்துள்ளது என்றே கூறலாம்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *