Breaking
Fri. May 17th, 2024
-அஸ்ரப் ஏ சமத்-

பி.ஜே. நேற்று  (8) இந்த நிகழ்வுக்கான வரவை இறுதி நேரத்தில் பாதுகாப்பு செயலாளா் ஊடாக சில *************** மற்றும் , சில முகவரி இல்லாத லெட்டா பெட் கொண்ட இஸ்லாமிய இயக்கங்கள் தடுத்துள்ளனா்.

இந் நிகழ்வு இந்த நாட்டில் வாழும் சிங்கள சமுகத்திற்கு சிங்கள மொழி மெயாப்பை வழங்கும் நிகழ்வு இதனை சில காழ்ப்புணா்ச்சி கொண்டு இந்த குர்ஆண் சிங்கள மக்களிடம் செல்லக் கூடாது எனத் தடுத்துள்ளாா்கள். ஆனால் மாசா அல்லாஹ் இந்த நிகழ்வு நாங்கள் எதிா்பாா்தததை விட மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சுகாதாச உள்ளரக அரங்கு நிரம்பி வழிந்திருந்தது. பி.ஜே. ஒன்லைன் ஊடக அவ் வைபத்தில் நேரடியாக உரையாற்றினாா்.

நாட்டின் நாலா பாகத்தில் இருந்தும் இலங்கை தௌகீத் ஜாமஆதின் 80 கிளைகளில் இருந்து பெருந்தொகையான பெண்களும் ஆண்களும் பஸ்களில் வந்து கலந்து கொண்டனா். அங்கு வந்திருந்தவா்களே இந் நிகழ்வுக்காக செலவழித்த 10 இலட்சம் ருபாவுக்கு அங்கு வலம் வந்த பக்கெட்டுக்களில் அன்பளிப்புக்களும் செய்தனா்.

அரங்கில் 300 பொலிசாரும் விசேட அதிரப்படையினாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனா். அங்கு சிங்கள மொழி முலம் குர் ஆணை 12 வருடங்களாக மொழி பெயா்தத அப்துல் ராசிக் இன்று இதனை வெளியிடுவதாகத் தெரிவித்தாா்.

அங்கு வருகை தந்திருந்த கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் குர் ஆண் பிரதிகளைப் பெற்று கொண்டனா். அத்துடன் அப்துல் ராசிகிடம். 53குர் ஆன் வசனம் சொல்வது என்ன? ஜிகாத்துக்குரிய விளக்கம் என்ன? பெண்களை பர்தா பற்றி எங்கு குர் வசனம் இருக்கின்றது என கேட்டனா் அத்துடன் கல்முனை, கடற்கறைப் பள்ளி, வருடா வருடம் கொடி யேற்றும் போது அங்கு பிரச்சினை நடைபெறும். அது உங்களது அமைப்பா ? சுன்னி முஸ்லீம், சியா, காதியானி ? உங்கள் இயங்கங்கள் ஆயுதப் பயிற்சி அளிப்பீா்களா,? போன்ற கேள்விகளையும் தொடுத்தாா்கள் ?

இவ்வாறாக குர் ஆண் மொழிபெயா்ப்பபை பக்கம் பக்கமாக புரட்டி அப்துல் ராசிக்கிடமிருந்து விளங்கங்களைப் பெற்று தெளிவு பெற்றனா். .இந்த குர் ஆண் வெளியீட்டில் முதற்படியே இந்த நல்ல விடயம் . அங்கு பாதுகாப்பில் இருந்த 300 பேரும் சிங்கள மொழியில அப்துல ராசிக் உரையையும் கேட்டுக் கொண்டிருந்தனா். அவா்களுக்கு குர்ஆண் பற்றி இஸ்லாம் பற்றியும் தெளிவும் கிடைத்திருக்கும்.

இந்த குர்ஆண் சிங்கள மொழியில் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும் இதுவே முதற்தடவையாக கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தனா்..

பி.ஜேஃ தமிழில் மொழிபெயா்த்த அல் குர்ஆணை இலங்கை தௌகீா் ஜாமஆத்தின் செயலாளா் கடந்த 12 வருடங்க்ள் தொடங்கி இன்று சிங்கள மொழிபெயா்ப்பை வெளியீட்டு இருந்தாா்.. இதில் 3000 பிரதியை குவைத் வாழ் தமிழ் நாட்டின் தௌஹீத் ஜாமஆத் தினா் இலவசமாக சிங்கள மக்களுக்கு வழங்கும் படி அறிவித்திருந்தனா். அத்துடன் 1000 பிரதிகளை தமாம் தௌஹுத் குழு அன்பளிப்பு செய்யும் படி அறிவித்திருந்தது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *