Breaking
Wed. May 15th, 2024
அளுத்­க­மையில் இடம் பெற்ற வன்­முறைச்  சம்­ப­வங்­களின் பின்  பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர்  ஞான­சார தேரரைக் கைது செய்­தி­ருந்தால் நாடெங்கும் முஸ்­லிம்­க­ளுக்கு  எதி­ரான வன்­மு­றைகள்  உரு­வா­கி­யி­ருக்கும்.
இத­னா­லேயே ஞான­சார தேரர்  கைது செய்­யப்­ப­ட­வில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரி­வித்தார்
.
பத்­த­ர­முல்லை,நெலும் மாவத்­தை­யி­லுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் அலு­வ­ல­கத்தில் நேற்று முன்­தினம்  நடை­பெற்ற  ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு  கூறினார். அவர் தொடர்ந்தும்  உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,
அளுத்­க­மயில் பொது­ப­ல­சேனா ஏற்­பாடு செய்த கூட்­டத்­துக்கு  தடை­வி­திக்­கு­மாறு நீதி­மன்­றத்­துக்கு விண்­ணப்­பித்தும் நீதி­மன்றம் அக்­கூட்­டத்­துக்கு தடை­வி­திக்­க­வில்லை.   கூட்­டத்­துக்கு தடை­வி­தித்தால்  முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­றலாம் என்­ப­த­னா­லேயே நீதி­பதி ஆயிஷா ஆப்தீன் கூட்­டத்­துக்கு தடை உத்­த­ரவு பிறப்­பிக்­க­வில்லை.
அடுத்த  ஜனா­தி­பதித் தேர்­த­லிலோ அல்­லது பொதுத் தேர்­த­லிலோ முஸ்­லிம்­களின் ஆத­ர­வின்றி  எவ­ருக்கும் ஆட்­சி­யி­ல­மர முடி­யாது. முஸ்­லிம்கள் ஆத­ரவு கட்­டா­ய­மாகத்  தேவைப்­ப­டு­கி­றது.  கடந்த தேர்­தல்­களில் நாம் முஸ்­லிம்­க­ளி­னாலே தோற்­க­டிக்­கப்­பட்டோம் என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். எந்தத் தரப்­பென்­றாலும் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு முஸ்­லிம்­களின் வாக்கு அத்­தி­ய­வ­சி­ய­மாகும்.
முன்னாள்  ஜனா­தி­ப­தியை தோற்­க­டிப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்டு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதில் அளுத்­கம சம்­ப­வமும்  ஒன்­றாகும்.  வெளி­நா­டு­களின் உள­வுப்­பி­ரி­வு­களும் மஹிந்த ராஜபக் ஷவைப் பதவி கவிழ்ப்­ப­தற்கு சதி செய்து ஒத்­து­ழைப்பு வழங்­கின.  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனது  பத­விக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு சார்­பா­கவே இருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷவின்  அமைச்­ச­ர­வையில்  பதவி வகித்த  அமைச்சர் மங்­கள சம­ர­வீர  ஐ.நாடுகள் சபையில் பலஸ்­தீ­னத்­துக்கு எதி­ராக  வாக்­க­ளித்­த­தனால் அவரை பதவி விலக்­கினார். இவ்­வாறு முஸ்­லிம்­களை நேசிப்­ப­வரே மஹிந்த ராஜபக்ஷ.
அளுத்­க­மயில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து வன்­செ­யல்கள் நாட்டில் ஏனைய  பாகங்­க­ளுக்குப் பர­வாமல் தடுப்­ப­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் நான் மேற்­கொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கினேன்.  ஏனென்றால் அளுத்­கம சம்­பவம் இடம்பெற்ற போது மஹிந்த     ராஜபக்ஷ  நாட்டில் இருக்கவில்லை என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *