Breaking
Tue. Apr 30th, 2024
சர்வதேச அளவில் மிக உயரமான கட்டிடமான  துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உயரமான  இடத்தில் பார்வையாளர் கூடம்  திறக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக உயர்ந்த பார்வையாளர் தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பார்வையாளர் தளம், தரைமட்டத்திலிருந்து 555 மீட்டர் உயரத்தில் 148வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பார்வையாளர்களுக்கான் தளம் 124வது மாடியில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற‌ கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தின் மத்தியக் கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான மண்டல மேலாளர் தலால் ஒமர் கூறுகையில், உலகின் முண்ணனி நகரங்களில் ஒன்றான துபாயில் ஏற்கெனவே தனது சாதனை மூலம் உலகை வியக்க வைத்த புர்ஜ் கலீஃபா கட்டிடம் மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது என்று பாராட்டினார். உலகின் உயரமான கட்டிடம், உலகில் உயரமான பார்வையாளர் தளம், உலகில் நீண்ட தூரம் செல்லகூடிய லிப்ட் வசதி,உலகில் அதிக தளங்கள் கொண்டது என இக்கட்டிடம் பல்வேறு உலக சாதனைகளில் இடம் பெற்றுள்ளது. உலக நாடுகளிலிருந்து ஏராளாமான சுற்றுலா பயணிகள் இக்கட்டிடத்தை பார்வையிட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *