Breaking
Tue. Apr 30th, 2024

அஸ்ரப் ஏ சமத்

இந்த நாட்டில் முஸ்லீம்கள்  10வீதம் உள்ளோம்.  எமது மாணவர்கள் வருடாந்தம் பல்கலைக்கழகம் செல்லும் வீதம் 2-3 வீதமாகவே உள்ளது. ஆனால் எமது சமுதாயத்தவர்கள் சிறைச்சாலைகளில் 16வீதமாக  உள்ளோம்.  அதுமட்டுமல்ல இந்த நாட்டில் அரச துறைகள், உயர்பதவிகளிலும் 2-3 வீதமாகவே உள்ளோம். ஆகவே தான் இங்கு உயாதரம் கல்வி பயில் புலமைப்பரிசில் பெற வந்துள்ள மாணவர்கள் தமது உயர்கல்வியை திறம்பட கற்று பல்கழைக்கழகம் செல்ல முயற்சிக்க வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

நேற்று(18)ஆம்திகதி  பிற்பகல் வெள்ளவத்தை லில்லி அவெணியில் உள்ள மூர் இஸ்லாமிக் கலாச்சார நிலையத்தின் கேட்போர் கூடத்தில் அல்ஹாஜ் எஸ்.எஸ்.எம் ஹூசைன் சகாயநிதிய புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இத்திட்டத்திற்காக நாடுமுழுவதிலுரிந்து சிறந்த பெருபேறுகளை பெற்று  உயர் தரம் கல்விகற்கும்   158 மாணவர்களுக்கு  புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் கலந்து கொண்டு புலமைபபரிசில்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வு எம்.ஜ.சி.எச் தலைவரும்; முன்னாள் கொழும்பு மேயருமான ஒமர் காமில் தலைமையில் நடைபெற்றது.  அத்துடன் ஹூசைன் ரஸ்ட் பண்டின் உறுப்பிணர்கள்   றிஸ்வி, தஹ்லான் மற்றும் குடும்பஸ்த்தர்களுடன் ஊடகத்துறை அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பிணர் ஏ.எச்.எம். அஸ்வர், கிழக்குமாகாணசபை உறுப்பிணர் எம்.எஸ்;.எஸ். அமீர் அலி, உட்பட பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர் றிசாத்
இஸ்லாம் மார்க்கம் கல்விக்கு  கொடுத்துள்ள முக்கியத்துவத்தையும்  குர்ஆண் ஹதீஸ் கிரந்தங்களில்  கல்விபற்றிய நோக்கங்களையும் விளக்கிக் கூறினார். குர்ஆணின்  முதல் இறைவாக்கியம் ‘இக்ராஹ்’ கல்வி, வாசி, அத்துடன் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெற்ற யுத்தத்தில் சிறைபிடிக்கப்பட்ட 70 பேரில் 10 முஸ்லீம்களுக்கு கல்விபுகட்டி அவர்களை விடுவித்த வரலாறுகளையும் கூறினார். ஆகவே தான் முஸ்லீம்கள் கல்வியில் முன்னேறி சிறந்த கல்விமான்களாக வரவேண்டும் என வேண்டிக் கொண்டார்.

SAMSUNG CSC SAMSUNG CSC SAMSUNG CSC SAMSUNG CSC

இங்கு புலமைப்பரிசில் திட்டத்தில் பெருமளவில்; பெண்கள் கூடுதலாக உள்ளனர். அவர்கள் கல்வியில் தமது இஸ்லாமிய வரையரைக்குள் கல்வியைக் கற்று இந்த ஹூசைன் குடும்பத்தர்களது   நோக்கத்தினை நிறைவேற்றி இந்த நாட்டில் சிறந்த வைத்தியர்கள் பொறியியலாளர்கள் கணக்காளர்களாக வெளிவரவேண்டும் என அங்கு வருகை தந்த மாணவர்களை வேண்டிக் கொண்டார்.

எம்.ஜ.சி.எச் 70 வருடகாலமாகவும்;;  ஹூசைன் சரிட்டபிள் ரஸ்ட் பண்ட் கடந்த 33 வருடகாலமாக இந்த நாட்டின் வாழும்  முஸ்லீம்களுக்கு சேவை செய்து வருகின்றது. காலம் சென்ற அல்ஹாஜ் ஹூசைன் அவர்கள் கொழும்பு பிச்சர்ஸ் பலஸ் உரிமையாளர். அவர்கள் ஆரம்பித்து வைத்த  இந்த நிதியம் தொடர்ந்தும் இந்த நாட்டில் உள்ள வறிய மாணவர்களுக்கு கைகொடுத்து கல்வியில்  முன்னேர உழைத்துவருதற்காக முஸ்லீம் சமுதாயம் சார்பாக நன்றியையும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *