Breaking
Tue. May 14th, 2024

கடந்த சில­வா­ரங்­க­ளாக மழை பெய்து ஓய்ந்­த­தை­ய­டுத்து கண்டி, தெல்­தெ­னிய பிர­தே­சங்­களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்­ப­டு­வ­தாக தெல்­தெ­னிய பொது சுகா­தார அதி­கா­ரிகள் அலு­வ­லகம் தெரி­விக்­கின்­றது.

இதே­வேளை இரு டெங்கு நோயா­ளர்கள் இப்­பி­ர­தே­சங்­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ்­வ­லு­வ­லக சுகா­தார அதி­கா­ரிகள் தெரி­வித்­த­துடன் இது தொடர்­பாக இப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு தெளி­வூட்டும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

இது இவ்­வா­றி­ருக்க பொது சுகா­தார அதி­கா­ரிகள் வீடுகள் தோறும் வந்து சுற்­றா­டல்­களை பரி­சோ­தனை செய்து வரு­கின்­றனர்.டெங்கு நுளம்­புகள் பரவும் வகையில் வீட்டுச் சுற்­றா­டலை அசுத்­த­மாக வைத்­தி­ருந்த 13 வீடுகள் உரி­மை­யா­ளர்­களைக் கண்டுபிடித்த சுகாதார அதிகாரிகள் அவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பிரசுரங்களை வழங்கியுள்ளனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *