Breaking
Thu. May 16th, 2024

-விடிவெள்ளி  ARA.Fareel-

கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் சம்பூர் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெற்ற நிகழ்வில் கடற்­படை தள­ப­தி­யுடன் நடந்து கொண்ட விதம் தொடர்­பாக அவர் மன்­னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரப்­ப­டு­வது தவ­றாகும்.
ஒருவர் தவறு செய்­தி­ருந்­தாலே மன்­னிப்புக் கேட்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரி­வித்தார்.
கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நடை­பெற்ற சம்­ப­வத்­துக்கு மன்­னிப்பு கேட்க வேண்டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.
தொடர்ந்தும் இது தொடர்­பாக அவர் கருத்து தெரி­விக்­கையில்;
 இது தொடர்­பாக கட்சி இது­வரை எவ்­வித பேச்­சு­வார்த்­தையும் நடத்­த­வில்லை. இச் சம்­ப­வத்­துக்கு முக்­கி­ய­ம­ளித்து சிலர் இன­வா­தத்தை முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்­றனர். முத­ல­மைச்சர் மாத்­தி­ர­மல்ல வேறு எவ­ரென்­றாலும் தனது தன்­மா­னத்­துக்கும் கௌர­வத்­துக்கும் சவால்கள் ஏற்­பட்டால் உணர்ச்­சி­வ­சப்­ப­டு­வது இயல்­பாகும்.
முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ­மட்­டுக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்­தி­ருந்தால், அவ­ருக்கு மேடையில் கதிரை ஒதுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். இதனை ஆளுநர் விழா ஏற்­பாட்­டா­ளர்கள் மூலம் செய்­வித்­தி­ருக்க வேண்டும். ஆனால் அவர் மேடைக்கு அழைக்­கப்­பட்டு அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறார்.
இத­னா­லேயே முத­ல­மைச்சர் உணர்ச்சி வசப்­பட்டு கடற்­படை தள­ப­தியைப் பேசி­யி­ருக்­கிறார். ஜனா­தி­பதி நாட்டில் இல்­லாத வேளை அவரை ஆலோ­சிக்­காது முப்­படை முகாம்­க­ளுக்கு விஜயம் செய்­வது அவ­ருக்கு தடை செய்­யப்­பட்­டி­ருப்­பதும் தவ­றாகும்.
இச் சம்­பவம் தொடர்பில் விசா­ரிக்க உயர்­மட்ட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு பின்னணியை ஆராய்ந்தே தீர்வுகள் பெறப்பட வேண்டும்.
அதை விடுத்து அவரை மன்னிப்பு கேட்கச் சொல்வதும் இராஜினாமா செய்யச் சொல்வதும் ஆரோக்கியமானதல்ல என்றார்.
அதேவேளை நசீர் அஹ்மட் மன்னிப்பு கேட்க வேண்டுமென ரவூப் ஹக்கீம் நேற்று வலியுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Untitled (1)

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *