Breaking
Sun. May 5th, 2024

பிரித்தானியாவிடமிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பதை வாக்கெடுப்பு முடிவுகள் தெளிவாகியுள்ளன.
இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. இவை இணைந்துள்ள பகுதி கிரேட் பிரிட்டன் அல்லது பிரிட்டன் என்று அழைக்கப்படுகிறது. இவற்றுடன் வடக்கு அயர்லாந்தும் இணைந்துள்ளது.
 
இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனிநாடு ஆக செல்ல முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே ஸ்கொட்லாந்து மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் பிரிட்டனிடம் இருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்தது.
 
ஆனால் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதை இங்கிலாந்து விரும்பவில்லை. கடந்த 307 ஆண்டுகளாக இணைந்திருக்கும் ஸ்கொட்லாந்து பிரிந்து போகாமல் இருந்தால் அதற்கு மேலும் கூடுதலாக தன்னாட்சி உரிமை உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் பிரிட்டனிடம் இருந்து பிரிந்து செல்வதில் ஸ்கொட்லாந்து உறுதியாக உள்ளது. அதற்கான பொது வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் முதல் கட்ட முடிவு வெளியிடபட்டது. பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்வதற்கு எதிராக 54.7 சதவீதம் பேரும் . ஆதரித்து 45.7 சதவீதம் பெரும் வாக்களித்து உள்ளனர்.
 
இந்த வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தின் 32 சபைகளில் நடத்தபட்டன. ஸ்கொட்லாந்து மக்கள்  உற்சாகத்துடன் வாக்களித்தனர். 84.48 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஓட்டுப் பதிவு உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு முடிந்தது. அதை தொடர்ந்து வாக்கு எண்ணப்பட்டன.
 
பதிவான மொத்த ஓட்டுக்களில் 19,14,187  பேர்  ஸ்கொட்லாந்து பிரியக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ’இல்லை’ என வாக்களித்து உள்ளனர்.15,39,920 பேர் பிரியவேண்டும் என் தெரிவித்து ’ஆம்’ என வாக்களித்து உள்ளனர்.
 
வாக்கெடுப்பு நடந்த 32 சபைகளில் 31 சபைகளின் ஓட்டு எண்ணிக்கை பெறுபேறுகளே வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *