Breaking
Sat. May 4th, 2024

இலங்கையால் சர்வதேசமே இரண்டாகப் பிளந்தது.ஆனால் நாம் கடைபிடித்த பிளவுபடாத வெளிநாட்டுக் கொள்கையினூடாக  பிளவுபட்டிருந்த சர்வதேசத்தை  ஒன்றிணைத்து அவற்றின் ஆதரவை பெற்றுக் கொண்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான  அரசின் 100 நாள் திட்டம் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் விசேட உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
நான் ஜனாதிபதியாகப் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் உங்களிடம் பேச ஆவலாய் உள்ளேன்.
இந்த நாட்டின் பொருளாதாரம்,அரசியல்,சர்வதேசத் தொடர்பு என்பவற்றை நோக்காகக் கொண்டு நாம் புதிய பல திட்டங்களை முன்னெடுத்தோம்.
பிளவுபட்டிருந்த சர்வதேசத்தை இணைத்து ஆதரவு பெற்றோம்.அன்று ஐ.நா மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களை நீங்கள் அறிவீர்கள் மக்கள் ஆணையினூடாக  நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன்  பின்னர் அனைத்துலக ரீதியில் நட்புகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் ஊடாக கிடைத்த ஜனநாயகத்தினூடாக  கடந்த 3 மாத காலங்களில் சிலருடைய நடத்தைகள் மற்றும் சில அரசியல்வாதிகளுடைய நடத்தைகளில் மாற்றங்களை காண்கையில் உலக வரலாற்றில் மாற்றத்தின் விளைவுகளைக் கண்டேன்.
பிளவுபட்டிருந்த சர்வதேசத்தை இணைத்து ஆதரவு பெற்றோம்.அன்று ஐ.நா மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களை நீங்கள் அறிவீர்கள் மக்கள் ஆணையினூடாக  நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன்  பின்னர் அனைத்துலக ரீதியில் நட்புகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.இலங்கையால் சர்வதேசமே இரண்டாகப் பிளந்தது.ஆனால் நாம் கடைபிடித்த பிளவுபடாத வெளிநாட்டுக் கொள்கையினூடாக  பிளவுபட்டிருந்த சர்வதேசத்தை  ஒன்றிணைத்து அவற்றின் ஆதரவை பெற்றுக் கொண்டோம்.
நான்; அதிகாரத்தை கையிலெடுக்க ஆட்சிக்கு வரவில்லை என்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகாரத்தை நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தேன்.அவ்வாறே செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணிவாகக் கேட்டுக் கொள்வது என்னவென்றால்,மக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து  19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு  ஆதரவாக வாக்களியுங்கள்
எனவே நல்லாட்சியினூடாக கிடைத்துள்ள  ஜனநாயகத்தை தவறாக  பயன்படுத்தாமல்  நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.நாம் முன்னோக்கிச் செல்வோம்,புதிதாக சிந்திப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *