Breaking
Fri. May 3rd, 2024

– அபூ செய்னப் –

பெண்கள் வெறுமனே பிள்ளை பெறும் இயந்திரங்கள் இல்லை,அவர்கள் வினைத்திறன் மிக்கவரகள்,நேர்த்தியான சமூக கட்டமைப்பினை உறுவாக்குவதில் முன்நிறபவர்கள் என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு விளையாட்டுத் துறை  அமைச்சும் கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய  விளையாட்டு மற்றும்  உடல்  ஆரோக்கிய விருத்தி வாரம் மற்றும் விசேட தின நிகழ்வில் பிரதம அதிதியாக  பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு  உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,
ஒரு மனிதனின் திறமையான செயற்பாட்டிற்கும், உற்சாகமான நடவடிக்கைகளுக்கும் தேக ஆரோக்கியம் இன்றியமையாததாகும்,உடலின் ஆரோக்கியமானது ஒருவனுக்கு அவனது ஏனையசெயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக நமது தேகத்தின் ஆரோக்கியம்  அமைகிறது, எனவே ஆண்,பெண் இருபாலருக்கும் தேக ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கு உடற்பயிற்சியும்,விளையாட்டுக்களும் உதவி புரிகின்றன, விளையாட்டுக்கள் நமது உடம்பை சோர்ந்து விடாமல் பாதுகாக்கின்ற,நாம் புத்துணர்வுடன் செயலாற்றவும்,அது உதவி செய்கிறது
மனிதனின் இரத்த ஓட்டத்தை சீராக்கும் பணியினை உடற்பயிற்சிகள் செய்கின்றன, நாடி,நாளங்களின் சரியான இயக்கம்,இதயத்துடிப்பு இப்படி உடம்பினை பாதுகாக்கின்ற ஒரு திட்டமிட்ட செயற்பாடு உடற்பயிற்சிகள் மூலம் உடம்பில் நடைபெறுகிறது,பெண்களை வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து அவர்களை வெறும் பிள்ளைப்பெறும் இயந்திரங்களாக பார்த்த காலம் மலை ஏறிவிட்டன, இன்று அவர்கள் தான் பல துறைகளில் முன்னனியில் திகழ்கின்றார்கள்,அவர்களை இன்னும் வீரியம் உள்ளவர்களாகவும், விவேகமுள்ளவர்களாகவும் உருவாக்கும் ஒரு கடப்பாடு நம்மிடம் இருக்கிறது, பெண்களையும் இந்த விளையாட்டு,உடற் பயிற்சி போன்ற விடயங்களில் பங்குபற்ற ஊக்கிவிக்கும் வேலைத்திட்டத்தினை நாம் முன்னெடுக்க வேண்டும், அது இன்னும் அவர்கள் மனதிடத்துடன் இயங்க உதவி செய்யும் ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த  உடற்பயிற்சி  அவசியம்  என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக செயலாளர் நெளபர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டம் பணிப்பாளர் றுவைத், கோட்டக் கல்விப் பணிப்பாளர் மீராசாஹிப் ,  பொதுமக்கள் தொடர்பு அதிகாரி  ஹயான் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *