Breaking
Sat. May 18th, 2024

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்­கப்­பட்­டுள்ள சிறப்­பு­ரிமைச் சலு­கை­களை வாபஸ் பெற வேண்டும் என்று தேர்­தல்கள் ஆணை­யா­ளரை வலி­யு­றுத் தும் ஐ.தே.க., முடிந்தால் குரு­ணா­கலில் மஹிந்த போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றுக்­காட்­டட்டும் என்றும் சவால் விடுத்­தது.

பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள ஐ.தே.க.வின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கருத்து தெரி­விக்­கும்­போதே ஐ.தே.க.வின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான அகிலவிராஜ் காரி­ய­வசம் இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தனக்கு 58 இலட்சம் மக்­களின் ஆத­ரவு இருப்­ப­தாகக் கூறும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட அல்­லது தலைமை வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டவோ பிர­தான பிர­சா­ர­க­ராக செயல்­ப­டவோ கட்சி அனு­மதி வழங்­க­வில்லை.

அவர் பிறந்த அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வதை கைவிட்டு மகனின் வெற்­றிக்­காக குரு­ணா­கலில் போட்­டி­யிட முயற்­சிக்­கின்றார்.நான் சவால் விடுக்­கின்றேன் முடிந்தால் மஹிந்த குரு­ணா­கலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்று காட்ட வேண்டும்.

அன்று ஜே.ஆர். ஜய­வர்­தன நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறை­மையை ஏற்­ப­டுத்தி ஜனா­தி­பதி ஒருவர் ஓய்­வு­பெறும் போது அவ­ருக்கு உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­தலம், உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­லகம், உத­வி­யா­ளர்கள், விசேட பாது­காப்பு உட்­பட விசேட சிறப்­பு­ரிமைச் சலு­கைகள் வழங்­கப்­பட வேண்டும் என்று அர­சி­ய­ல­மைப்பில் வலி­யு­றுத்­தினார்.

இது ஜனா­தி­பதி பத­விக்கு உள்ள கௌர­வத்தை பாது­காப்­ப­தற்கே ஆகும். எனவே இன்று மஹிந்த கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­யுற்ற பின்னர் தற்­போது பொதுத் தேர்­தலில் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­ட­வுள்ளார்.

இதனால் முன்னாள் ஜனா­தி­ப­தி­யான மஹிந்­த­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள விசேட சிறப்­பு­ரி­மை­களை தேர்­தல்கள் ஆணை­யாளர் மீளப் பெற வேண்டும்.மஹிந்த இன்று தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்­ளதால் அவர் முன்னாள் ஜனா­தி­ப­தியின் பட்­டி­யலில் இடம்­பெற முடி­யாது.

எனவே மஹிந்­தவும் சாதா­ரண வேட்­பாளர் எனக் கணித்து சிறப்­பு­ரி­மை­களை தேர்­தல்கள் ஆணை­யாளர் மீளப்­பெற வேண்டும். இல்­லா­விட்டால் அது பிழை­யான முன்­னு­தா­ர­ண­மாக அமையும். எதிர்­கா­லத்தில் அனை­வரும் இவ்­வாறு விசேட பாது­காப்பு கோரு­வார்கள்.

இது ஏனைய வேட்­பா­ளர்­க­ளுக்கு இழைக்கும் அநீ­தி­யாகும்.மஹிந்­தவை சுற்றி இன்று மோச­டிக்­கார கும்­பலே உள்­ளது. அவர்கள் மஹிந்­தவை பிர­த­ம­ராக்கி குற்­றங்­க­ளி­லி­ருந்து தப்­பித்துக் கொள்ள முயற்­சிக்­கின்­றார்கள்.எனவே எதிர்­வரும் தேர்­தலில் யாரை பாரா­ளு­மன்றம் அனுப்ப வேண்டும் யாரை அனுப்பக் கூடாது என்­பதை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும்.
ஒரு வரு­டத்­திற்கு 10,000 கோடி ரூபா செல­வ­ழித்த திரு­டர்­களை பாது­காத்த திருட்டை சட்­ட­பூர்­வ­மாக்­கிய மஹிந்த மீண்டும் வெற்றி பெறமாட்டார்.

ஐ.தே.க. இத்தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது நிச்சயமாகும். இதனை எவராலும் தடுக்க முடியாது.எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதியுடன் ராஜபக் ஷக்களின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென்றும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.vk

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *