Breaking
Sat. May 18th, 2024

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ  தனது ஆட்சிக் காலத்தில் நடை­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான  நட­வ­டிக்­கை­க­ளுக்கு வருத்தம் தெரி­வித்­துள்­ளதால் முஸ்­லிம்கள் அவரை மன்­னித்­து­விட்­டார்கள்.

பொதுத்­தேர்லில் அவர் தரப்பில் போட்­டி­யி­டு­வ­தற்கு பல முஸ்­லிம்கள் முன்­வந்­தி­ருக்­கின்­றமை இதனை உறு­தி­செய்­கி­றது என முன்னாள் முஸ்லிம் சம­ய­வி­வ­கார அமைச்சர் எ.எச்.எம். அஸ்வர் தெரி­வித்தார்.

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் முஸ்­லிம்­களின் வகி­பாகம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்   மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு துரோகம் இழைத்­த­தா­கவும் பொது­ப­ல­சே­னாவின் முஸ்லிம் எதிர் நட­வ­டிக்­கை­களை நிறுத்­த­வில்லை எனவும் துத்­தி­ரிகள் கோஷ­மிட்­டார்கள். துத்­தி­ரிகள் ஒரு போதும் ஆல­ம­ர­மாகப் போவ­தில்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஐ.ம.சு. கூட்­ட­மைப்பில் வேட்பு மனு வழங்க தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றமை ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியை கூறு­போட நினைத்­தி­ருந்த சியோ­னி­ச­வா­தி­க­ளுக்குப் பிடிக்­க­வில்லை. நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மக்கள் ஆணை பெற்ற ஜனா­தி­ப­தியே மஹிந்­தவை இணைத்துக் கொண்டு அர­சியல் பய­ணத்தை தொடர தீர்­மா­னித்­துள்ளார்.

சிறு­பான்மை சமூ­கத்தின் நலனில் அக்­கறைக் கொண்­டுள்ள மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்­தவை ஏற்­றுக்­கொண்­டுள்­ளதால் முஸ்­லிம்கள் எவ்­வித அச்­ச­மும்­கொள்ளத் தேவை­யில்லை. பொதுத் தேர்­தலின் பின்பு அமை­ய­வுள்ள அர­சாங்­கத்தில் மஹிந்த மைத்­தி­ரி­பா­லவின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மை­வா­கவே செயற்­ப­டுவார்.

தமக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் பொது­ப­ல­சே­னா­வி­னாலே செயற்­ப­டுத்­தப்­பட்­டன. அதில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு சம்பந்தமில்லை என்பதை முஸ்லிம்கள் இன்று உணர்ந்துவிட்டார்கள் .

இதனை மஹிந்தவும் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார். இதனால் இன்று முஸ்லிம்களின் மனநிலையில் மாற்றமேற்பட்டுள்ளது  என்றார்.

-Vidivelli-

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *